'பார்க்க முள்ளம்பன்றி போன்ற தோற்றம்'...'கரை ஒதுங்கிய விஷத்தன்மை கொண்ட பேத்தை மீன்கள்'... என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோடியக்கரையில் விஷத்தன்மை கொண்ட பேத்தை மீன்கள் இறந்து கரை ஒதுங்கின.
வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடற்கரையில் விஷத்தன்மை அதிகம் கொண்ட பேத்தை மீன்கள் நேற்று ஏராளமாக இறந்து கரை ஒதுங்கின. இந்த வகை மீன்கள் தன் உடலை 10 மடங்கு பருமன் உள்ளதாக மாற்றிக்கொள்ளும் திறன் வாய்ந்தது. இந்த மீனின் உடல் முழுவதும் முள் இருக்கும் என்பதால் முள்ளம்பன்றி மீன் என மீனவர்கள் இதனைக் குறிப்பிடுவர்.
இந்த வகை மீன்கள் தன் உடலை 10 மடங்கு பருமன் உள்ளதாக மாற்றிக்கொள்ளும் திறன் வாய்ந்தது. தனது எதிரிகளை அச்சுறுத்தும் வகையில் நீர் அல்லது காற்றைக் கொண்டு தனது உடலை ஊதிப் பெரிதாக்கும் ஆற்றல் பெற்றவை. பேத்தா மீன், பேத்தை, பேத்தையன் என அழைக்கப்படும்.
இந்த அரிய வகை மீன்கள் கடலின் நீரோட்டம் மற்றும் இயற்கை இடர்பாடுகள், சுற்றுச்சூழல் மாசுபடுதல் போன்ற பல்வேறு காரணங்களால் கோடியக்கரை, வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வனவன்மகாதேவி உள்ளிட்ட கடற்கரையில் ஆலிவர் ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவதும், பேத்தை, ஜெல்லி போன்ற மீன்களும் அதிகளவில் இறந்து கரை ஒதுங்குவதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
மற்ற செய்திகள்