'இதனாலதான் ஆரம்பத்துல இருந்தே.. காப்பாத்தாம வீடியோ எடுத்தேன்!'.. கொடைக்கானல் பெண் தீக்குளித்த வழக்கில் வீடியோ எடுத்தவர் கூறிய 'வியக்க வைக்கும்' காரணம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியில் உள்ள ஆடலூரைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி 32 வயதான மாலதிக்கு ஒரு மகன் உள்ள நிலையில், 10 வருடங்களாக கணவன் மற்றும் மகனைப் பிரி்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.

'இதனாலதான் ஆரம்பத்துல இருந்தே.. காப்பாத்தாம வீடியோ எடுத்தேன்!'.. கொடைக்கானல் பெண் தீக்குளித்த வழக்கில் வீடியோ எடுத்தவர் கூறிய 'வியக்க வைக்கும்' காரணம்!

தற்போது கடந்த 4 வருடமாக கே.சி.பட்டியை சேர்ந்த 26 வயதான சதீஷ் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், தான் நம்பி வந்த சதீஷ் வெறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதால், மனமுடைந்த மாலதி சதீஷின் வீட்டு முன்பு நின்று உடலில் தீவைத்து தற்கொலை செய்துகொண்டார்.

முன்னதாக மாலதி தனது சேலையில் தீ வைத்துக்கொள்வதற்கு முன்னரே டீக்கடையில் டீ அருந்தியபடி இருந்த ஒருவர் அப்படியே அவ்விடத்தை விட்டு நகர்கிறார்.

இதனை அடுத்து தனக்குத் தானே தீவைத்துக்கொண்டதுடன், தீ மளமளவென பற்றி எரிந்தது தொடங்கி, பிறகு “காப்பாத்துங்க” என்று தீக்காயங்களுடன் அலறியபடி மாலதி இறக்கும் தருணம் வரையிலான அந்த 2 நிமிடங்களும், அப்பெண்ணை காப்பாற்ற முயற்சிக்காமல் அருகிலிருந்த, ஒருவர் வீடியோ மட்டும் எடுத்து, வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த, தாண்டிக்குடி போலீஸார் முன்னதாக தற்கொலைக்கு தூண்டியதாக சதீஷ் என்பவரை கைது செய்ததுடன்,  அப்பெண்ணை காப்பாற்ற முயலாமல் மனிதாபிமானமின்றி வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டவர் குறித்து விசாரித்தனர். ஆனால் வீடியோ எடுத்தவர் சதீஷின் சகோதரர் சரவணக்குமார் என்பதை அறிந்ததை அடுத்து அவரையும் கைது செய்துள்ளனர்.

இதுபற்றி காரணம் கூறிய சரவணக்குமார், மாலதி தானாகவே முன்வந்து தற்கொலை முயற்சித்தார் என்பதற்கு சாட்சியாக இந்த வீடியோவை பதிவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். எனினும் மாலதியை காப்பாற்ற முன்வராமல் வீடியோ எடுத்ததால் தற்கொலைக்கு தூண்டிய சதீஷ்க்கு சரவணகுமார் உடந்தையாக இருந்ததாக அவரையும் போலீஸார் கைது செய்தனர். 

மற்ற செய்திகள்