Veetla Vishesham Mob Others Page USA

சொல்ல சொல்ல கேக்காம மனைவியுடன் Chat செய்த நண்பன்.. கோபத்துல கணவர் செஞ்ச காரியம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொடைக்கானலில் தனது மனைவியிடம் சாட்டிங் செய்து வந்த நண்பரை கணவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொல்ல சொல்ல கேக்காம மனைவியுடன் Chat செய்த நண்பன்.. கோபத்துல கணவர் செஞ்ச காரியம்..!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அன்னை தெரசா நகர் பகுதியை சேர்த்தவர் கார்த்திக். 28 வயதான இவர் காதலித்து திருமணம் செய்துகொண்டு தற்போது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கார்த்திக்கிற்கும் அதே பகுதியில் இயங்கிவரும் தனியார் தங்கும் விடுதியில் மேலாளராக பணிபுரிந்து வரும் சத்திய நாதன் என்பவருக்கும் சமீபத்தில் நட்பு ஏற்பட்டிருக்கிறது. சத்திய நாதனை தனது வீட்டிற்கு அழைத்துவரும் அளவுக்கு இருவரும் நெருங்கி பழகிவந்ததாக தெரிகிறது.

கண்டிப்பு

இந்நிலையில், சத்திய நாதன் கார்த்திக் மனைவியிடம் செல்போன் மூலமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. போன்கால், சாட்டிங் என இருவரும் பேசி வந்ததாகவும் இதனால் கோபமடைந்த கார்த்திக் இருவரையும் கண்டித்ததாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும், சத்தியநாதனும் கார்த்திக்கின் மனைவியும் தொடர்ந்து போனில் பேசி வரவே கார்த்திக் கோபமடைந்ததாக தெரிகிறது.

திட்டம்

சத்திய நாதன் மீது கோபத்தில் இருந்த கார்த்திக், நேற்று வெளியே சென்றிருக்கிறார். அப்போது, சத்திய நாதனை இருசக்கர வாகனத்தை ஓட்டச் சொல்லிய கார்த்திக், பின்புறம் அமர்ந்திருக்கிறார். பெர்ன்ஹில் சாலையில் வாகனம் சென்றுகொண்டிருந்த வேளையில், ஆள் நடமாட்டம் இல்லாததை கவனித்த கார்த்திக், சத்திய நாதனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த சத்திய நாதன், அங்கிருந்த தப்பித்துச் செல்ல முயன்றிருக்கிறார்.

இதனிடையே தகவல் கேட்டு விரைந்து வந்த காவல்துறையினர் கார்த்திக்கை கைது செய்ததுடன், சத்திய நாதனை கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பிறகு மேல்சிகிச்சைக்காக அவர் தற்போது மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். கொடைக்கானலில் தனது மனைவியுடன் செல்போனில் பழகிவந்த நண்பரை கடுமையாக தாக்கிய கணவர் காவல்துறையால் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

KODAIKANAL, WIFE, CHATTING, கொடைக்கானல், நண்பன், மனைவி

மற்ற செய்திகள்