‘கிலோ கணக்கில் தங்கம்... லட்சம் லட்சமா, பணம்!’ - ‘கடத்தல் ராணி’ ஸ்வப்னாவின் பின்னணியில் இருப்பது ‘இவரா?’ - அதிர்ச்சியில் கேரள அரசியல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவனந்தபுரத்திலுள்ள அமீரக நாட்டின் தூதரகத்துக்கு உணவுப்பொருட்கள் என்கிற பெயரில் பார்சல் வருவது வழக்கமாக இருந்த சூழ்நிலையில் மற்றொரு நாட்டின் இரண்டாயிரத்துக்கு வரும் பார்சல்களை சுங்கத்துறையினர் வழக்கமாக சோதனை தெரிகிறது
இந்த பார்சலை ஸரித் என்பவர் எடுத்துச் சென்றுள்ளார். இப்படி வரும் பார்சல்களில் தங்கம் கடத்துவதாக தகவல் கசிந்ததையடுத்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இதுபோன்ற பார்சல்களை சோதனை செய்ய சுங்கத்துறை அதிகாரிகள் சிறப்பு அனுமதி பெற்று சோதனையிட்டபோது 15 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ தங்கம் இருந்ததை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த கடத்தலில் கேரள தகவல் தொடர்பு துறையில் மேலாளராகப் பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ் என்பவருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக இவர் யு.ஏ.ஈ நாட்டு தூதரகத்தில் பணியாற்றியிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து இவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றினர். தங்க கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னாவுக்கு கேரளத் தகவல் தொடர்பு துறையில் எப்படி மேலாளர் வேலை கிடைத்தது என்று ஒருபக்கம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இன்னொரு பக்கம் முதல்வர் பினராய் விஜயனின் முதன்மை செயலரும் கேரள தகவல் தொடர்பு துறை செயலருமான சிவசங்கரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிலதா என்பவர் முதல்வர் அலுவலகத்துக்கும் தங்க கடத்தலுக்கும் தொடர்புள்ளதாகவும், தங்கக் கடத்தலுக்குத் துணையாக பொறுப்பில் உள்ளவர்களே இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதனையடுத்து தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலர் சிவசங்கரனின் பதவி பறிக்கப்பட்டு அவருக்கு பதிலாக மீர் மொகமது ஐடி துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் ஐடி துறை செயலராக சிவசங்கர் தொடர்ந்து பணியாற்றுவார் என்றும் தெரிகிறது.
இதனிடையே அமீரகத்தில் இருந்து வரும் பார்சல்களை விடுவிக்குமாறு சுங்கத்துறைக்கு சிவசங்கர் போன் செய்துள்ளதாகவும் பலமுறை தங்க கடத்தலில் சிக்கிய ஸ்வப்னாவை காப்பாற்றியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதேபோல ஷோபனாவை சிவசங்கர்தான் பதவியில் நியமனம் செய்ததாகவும் தகவல்கள் வெளியானதை அடுத்து இதுகுறித்து சிவசங்கரிடத்தில் கேரள முதல்வர் விளக்கம் கேட்டுள்ளார். இதில் ஆச்சரியப்படும் தகவல் என்னவென்றால் அமீரகத்திலிருந்து ஒரு முறை தங்கம் கடத்துவதற்கு ஸ்வப்னா பெற்றதாக கூறப்படும் தொகை ரூபாய் 25 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்