இந்தியாவில் 'கொரோனா' சோதனை... 'அதிகம்' நடத்திய மாநிலங்கள் இவைதான்... 'தமிழ்நாட்டுக்கு' எத்தனாவது இடம்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்தியளவில் கொரோனா சோதனை அதிகம் நடத்திய மாநிலங்களின் பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது.

இந்தியாவில் 'கொரோனா' சோதனை... 'அதிகம்' நடத்திய மாநிலங்கள் இவைதான்... 'தமிழ்நாட்டுக்கு' எத்தனாவது இடம்?

உலகளவில் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா தொற்றை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதுவரை இந்தியாவில் 519 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். 10 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். இதனால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு தமிழ்நாட்டில் இன்று முதல் 144 தடையுத்தரவு அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்தியா முழுவதும் வரும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என பிரதமர் மோடி அறிவித்து இருக்கிறார்.

இந்த நிலையில் இந்தியளவில் அதிகம் பேரிடம் கொரோனா சோதனை நடத்திய மாநிலங்கள் குறித்த பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் கேரளா முதலிடத்தையும் கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்கள் 2,3-வது இடங்களையும் பிடித்துள்ளன. தற்போது 7 மாநிலங்களுக்கான சோதனை தரவுகள் பட்டியல் மட்டுமே வெளியாகி இருக்கிறது. இதில் நமது தமிழகம் 4-வது இடத்தை பிடித்துள்ளது. குறைந்த சோதனை மாதிரிகளுடன் மேற்கு வங்காளம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 36% பேர் கேரளா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் இருப்பது குறிப்பிடத்தக்கது.