அஜித் சார்க்கு தீனா, ரெட் எப்படி BLOCKBUSTER ஹிட்டோ.. அப்படி ஒரு படம் சிம்புக்கு 'பத்து தல'.. தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஷேரிங்ஸ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அஜித் சார்க்கு தீனா, ரெட் எப்படி BLOCKBUSTER ஹிட்டோ.. அப்படி ஒரு படம் சிம்புக்கு 'பத்து தல'.. தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஷேரிங்ஸ்!

                          Images are subject to © copyright to their respective owners.

Also Read | விஜய் நடிக்கும் 'LEO'.. அடுத்த லுக் போஸ்டர் ரெடி போல.. காஷ்மீரில் பிரபல இயக்குனர் கொடுத்த HINT!

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது.

இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிகிறார்.

KE Gnanavel Raja about Ajithkumar Red Dheena Silambarasan TR Pathu Tha

Images are subject to © copyright to their respective owners.

பத்து தல படத்தின்   படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ஐத்ராபாத், விசாகப்பட்டினம், , கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி, துங்கபத்திரை அணை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கோவிலூர்,கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் நடந்து நிறைவடைந்தது.

KE Gnanavel Raja about Ajithkumar Red Dheena Silambarasan TR Pathu Tha

Images are subject to © copyright to their respective owners.

தற்போது இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பத்து தல படத்தின் டீஸர், பாடல்கள் & டிரெய்லர்  வெளியானது.  நேற்று முன்தினம் பத்து தல படத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், இயக்குனர் கிருஷ்ணா, இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

KE Gnanavel Raja about Ajithkumar Red Dheena Silambarasan TR Pathu Tha

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா  அளித்துள்ளார். அதில் பத்து தல படம் குறித்து பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.  "நானும் சிம்புவும் பத்து தல படத்தில் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பை எனக்கு கடவுள் அமைத்துக் கொடுத்துள்ளார்.

KE Gnanavel Raja about Ajithkumar Red Dheena Silambarasan TR Pathu Tha

என்னுடைய ஒரே இலக்கு என்னான்னா இந்த படத்தை நல்லபடியாக எடுத்து சிம்புவுக்கு இந்த படம் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பெற பத்து தல பங்கு வகிக்கும் என நம்பிக்கை இருந்தது. அஜித் சார்க்கு தீனா, ரெட் படம் எப்படி ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆகி ரசிகர்கள் கூட்டத்தை கொண்டு வந்ததோ அந்த மாதிரி இந்த படமும் ஃபிளாக்பஸ்டர் ஹிட்டாக அமையும்" என ஞானவேல்ராஜா கூறினார்.

Also Read | "உலகம் பூராவும் தல -னா அது அஜித் சார் மட்டும் தான்".. பத்து தல தலைப்பு குறித்து ஞானவேல்ராஜா EXCLUSIVE!

KE GNANAVEL RAJA, AJITHKUMAR, RED DHEENA, SILAMBARASAN TR, PATHU THALA

மற்ற செய்திகள்