"உப்புக்கறி ... கத்திரிக்கா கூட்டு".. சீமான் இதெல்லாம் சமைப்பாரா? சீக்ரெட் சொன்ன மனைவி.. வீடியோ
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது மனைவி கயல்விழி தங்களது முதல் சந்திப்பு குறித்து பேசியுள்ளனர். அப்போது, வீட்டில் சீமான் சமைக்கும் உணவுகள் குறித்தும் சுவையுடன் விவரித்திருக்கிறார் கயல்விழி.
Also Read | "First மீட்டிங் இப்படிதான் இருந்தது".. சீமானுடன் காதல் மலர்ந்தது எப்படி? மனைவி சொன்ன சுவாரஸ்யம்.!.. 😍 வீடியோ
தமிழக அரசியல் சூழலில் பரபரப்பாக இயங்கி வருபவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அண்மையில் Behindwoods 'மக்களுடன் சீமான்' எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியை கலக்க போவது யாரு T.சரவண குமார் மற்றும் அசார் ஆகியோர் தொகுத்து வழங்கினர். இதில் சீமான் கலந்துகொண்டு தனது வாழ்க்கை அனுபவம் குறித்து பல்வேறு தகவல்களை மக்களுடன் பகிர்ந்துகொண்டார். அப்போது, தனது மனைவி பற்றி பேசிய சீமான், தன்னுடைய உயிர் என்றும் வீட்டின் குலவிளக்கு என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
மேடையில் சீமான் பேசிக்கொண்டிருக்கும்போதே, அவருடைய மனைவி கயல்விழி உள்ளே வர, சட்டென்று ஆச்சர்யமடைந்த அவர் மகிழ்ச்சியுடன் கரம்கூப்பி அவரை வரவேற்றார். இதனை தொடர்ந்து, தங்களுடைய முதல் சந்திப்பு பற்றியும், பின்னர் அது காதலாக மாறிய விதம் குறித்தும் இருவரும் பேசினர்.
இதனை தொடர்ந்து, வீட்டில் சீமான் சமையல் செய்வது பற்றி நகைச்சுவையுடன் கயல்விழி பேசினார். அப்போது,"வீட்டுல உப்புக்கறி ரொம்ப சிறப்பா செய்வாரு. அப்புறம் கத்திரிக்கா கூட்டு. இந்த ரெண்டுமே அருமையா சமைப்பாரு. ஆனா இது தவிர வேறு எதுவும் சமைக்க தெரியாது. சட்னி-ல என்ன போடுவோம்னு கூட பார்க்க மாட்டாரு. அவரு சமைக்கும் போது நமக்கு அறிவுரை கொடுப்பாரு பாருங்க. அப்போ அதை கேட்டுக்க தான் வேணும்" என சொல்ல அருகில் இருந்த சீமான் வெடித்துச் சிரித்தார்.
பின்னர் தனது சமையல் பற்றி பேசிய சீமான்,"நம்ம கத்துக்கிட்டது 2 சமையல் தான். அதை நல்லா செய்யுறோம்ல" என புன்னகையுடன் சீமான் சொல்ல, தொகுப்பாளர் அசார்,"தம்பிங்க எங்களுக்கும் உப்புக்கறி சமைச்சு கொடுங்கண்ணே" என தயக்கத்துடன் ஜாலியாக கேட்டார். இதற்கு சட்டென்று பதில் சொல்லிய சீமான்,"நீ ஒருநாள் வா. போட்டுடலாம்" என மகிழ்வுடன் அவரை அழைத்தார்.
Also Read | 2 நாளைக்கு தட்டி வீசப்போகுது மழை.. இந்த இடங்கள்லாம் மிக கனமழை இருக்கும்.. வெதர்மேன் கொடுத்த வார்னிங்..
மற்ற செய்திகள்