Neeya Naana : "ஒரு செகண்ட்ல பெண்களை எடை போடாதீங்க.. அந்த குடும்பம் தலைநிமிரும்!".. நீயா நானா ‘வைரல்’ தாய்க்காக பேசிய கவிஞர் தாமரை & நயன்தாரா பட இயக்குநர்.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி சமூக அளவில் அனைத்து தரப்பினரும் பார்க்கக்கூடிய மற்றும் அவர்களின் சிந்தனையை தூண்டக்கூடிய விவாத நிகழ்ச்சியாக பல ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து வருகிறது.
Also Read | மொத்தமா 15 மனைவிகள்.. 107 குழந்தைங்க.. "இத்தனை கல்யாணம் பண்ணது ஏன்? அதிரவைத்த காரணம்..
இந்த நிகழ்ச்சியின் அண்மை டாப்பிக் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. அதன்படி அதிகமாக சம்பாதிக்கும் மனைவிகள் Vs குறைவாக சம்பாதிக்கும் கணவர்கள் குறித்த விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குறிப்பிட்ட கணவர் ஒருவர் தன்னுடைய சம்பாத்தியம், தொடர்ச்சியான தொழில் தோல்விகள் உள்ளிட்டவற்றால் தனக்கு சுற்றத்தாரிடம் மரியாதை குறைகிறது என்று வருந்தி பதிவு செய்கிறார். இது குறித்து அவருடைய மனைவி குறிப்பிடும் பொழுது தன் குடும்பத்தினர் தன் கணவரிடம் பேச்சுவார்த்தை கூட வைத்துக் கொள்வதில்லை என்றும், தன் வீட்டார் போட்ட நகைகளை கூட கணவர் அடகு வைத்து விட்டார் என்பதால் அவர்கள் முகம் பார்த்தால் கூட பேசுவதில்லை, எந்த விசேஷத்திற்கும் அழைப்பதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதே போல், “மகளின் பிராக்ரஸ் ரிப்போர்ட்டை நான் கையெழுத்து போட முடியாமல் மனைவி கையெழுத்து போட்டு விடுகிறார்” என்று அந்த கணவர் ஆதங்கத்தை முன்வைக்க, “அதற்கு காரணம் கணவர் கல்வி பின்புலம் இல்லாதவர் என்பதால் அவருக்கு அது புரிவதும் இல்லை. வெகுநேரம் அந்த ரிப்போர்ட்டையே பார்த்துக் கொண்டிருப்பதால் நான் சீக்கிரம் கையெழுத்து போட்டு விடுவேன் என்பதுதான்” என்று குறிப்பிட்டார். அதற்கு காரணம் சொன்ன அந்த கணவரோ, “நான் படிக்கவில்லை. என்னுடைய மகள் நன்றாக படிக்க வேண்டும், பெரிய ஆளாக ஆக வேண்டும். 10 மார்க் தாண்டி நான் பெரிதாக மார்க் எடுத்ததில்லை. எனவேதான் அவள் எடுத்த மார்க்கை அப்படி வியந்து பார்ப்பேன். அவள் நன்கு படிக்க வேண்டும். அவளுடைய பள்ளிக்கட்டணத்தை முதல் கொண்டு நானே தான் கட்டுகிறேன். ஏனென்றால் நான் தான் அதை செய்ய வேண்டும், அவளுடைய படிப்பு முழுக்க என்னுடைய உழைப்பில் உருவாக வேண்டும், அவளுடைய கனவு சாத்தியப்பட வேண்டும், அதற்கு நான் பக்கபலமாக நிற்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை” என்று உணர்ச்சி பொங்க நெகிழ்ச்சியுடன் பேசியதை அரங்கமே உறைந்து பார்த்தது.
இதனை தொடர்ந்து எப்போதும் ஷோ முடிவில் தரக்கூடிய சிறப்பு பரிசை கோபிநாத் உடனடியாக பாதி நிகழ்ச்சியிலேயே வரவழைத்து அந்த பரிசை இந்த தம்பதியரின் மகளை அழைத்து அந்த குட்டி பெண்ணின் கையில் கொடுத்து அப்பாவிடம் கொடுக்கச் சொன்னார். அந்த பெண்ணோ, “என் அப்பா தோற்கவில்லை. எனக்காக தான் கஷ்டப்படுகிறார், என்னுடைய அப்பாவுடைய ஆசை, நான் நன்றாக படிக்க வேண்டும் என்பதுதான்.. அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவது என்னுடைய ஆசை.. என்னுடைய அப்பாவிடம் பேசாத சுற்றத்தாரிடம் நானும் பேசமாட்டேன்.. என் அப்பா தோற்கவில்லை” என்று அழுதபடி பேசுகிறார்.
இதில் அந்த பெண்மணி பேசும்போது, “என்னுடைய கணவர் அதிகம் படிக்கவில்லை படிக்கவில்லை, சம்பாதிக்கவில்லை, அவர் சம்பாத்தியம் போதாமையுடன் இருப்பதால் தொழில் விருத்தி இல்லை, உபயோகத்தில் நிறைய இழப்பு நேரிடுகிறது, எனவே என்னுடைய குடும்பத்தார் யாரும் அவரை மதிப்பதில்லை, எந்த விசேஷங்களுக்கும் பெரிதாக அழைப்பதில்லை, இப்படி இருந்தால் என்ன செய்வது?” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதேபோல் ஒரு பேருந்து பயணத்தில் தன்னுடைய தம்பி தன் கணவரிடம் பேசவே இல்லை என்பது பற்றியும் அவர் தெரிவித்தார்.
அதற்கு கோபிநாத், “இதுவே உங்கள் கணவர் உங்கள் தம்பியிடம் இதேபோன்ற காரணங்களுக்காக பேசாமல் போனால், உங்கள் கணவரிடம் வந்து ஏன் என் தம்பியிடம் பேசாமல் போனீர்கள் என்று கேட்பீர்கள் தானே?” என்று கேட்கிறார். அதற்கு அந்த பெண்ணும், “நிச்சயமாக கேட்பேன்” என்று இயல்பாக பதில் சொல்கிறார். இதை கேட்ட கோபிநாத், “உங்கள் கணவரின் மரியாதை உங்கள் மரியாதையா ? உங்கள் தம்பியின் மரியாதை உங்கள் மரியாதையா?.. ஏதோ ஒரு நேர விஷயமாக இருக்கலாம், ஒரு தொழில் தந்திரம் தெரியாமல் இருக்கலாம், ஏதோ ஒரு சில காரணங்களால் தொழில் தோல்வி ஏற்படுவது என்பது தற்காலிகம், அது ஒரு நாள் மாறிவிட கூடும், அதற்காக ஒரு நல்ல மனிதராக இருக்கும் ஒருவரை வெறுக்கலாமா? குடும்ப சுற்றத்தாரால் அவர் மீது நிகழ்த்தப்படும் அவமானங்களை தாண்டி நீங்கள் தானே கணவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.” என்று கூறி புரியவைக்கிறார்.
இதேபோல், “என் கணவர் படிக்கவில்லை. குழந்தையின் ரிப்போர்ட் கார்டில் இருப்பது கூட அவருக்கு புரியாது” என பல்வேறு விஷயங்களை பேசிய அந்த பெண் குறித்து தற்போது பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவிக்க, அதில் பலரும் நேர்மறையாக பல விஷயங்களை முன் வைத்திருக்கின்றனர். அதன்படி நீயா நானாவில் பேசக்கூடியவர்கள் இயல்பாகவே தங்களுக்கு தோன்றுவதை பேசுவார்கள். ஏனென்றால் எதார்த்த சமூக குடும்பத்தில் வாழக்கூடியவர்கள். அவர்கள் கேமரா முன்பு ஒப்பனை சேர்த்து எல்லாம் பேச மாட்டார்கள் எனும் போது அந்த பெண் இயல்பாக தன் மனதில் தோன்றிய விஷயங்களை பேசினார். எது சரி எது தவறு என்பது குறித்த தெளிவுகள், புரிதல்கள் காலப்போக்கில் அவருக்கு உண்டாகலாம். ஆனால் தன்னுடைய கணவருக்கு தன் மகள் பரிசு கொடுக்கும்போது எந்தவித முகசுளிப்பும் இன்றி, ஈகோவும் இன்றி வெள்ளந்தியாக மகிழ்ச்சியுடன் சிரித்தபடி அதை பார்த்து கைதட்டி சந்தோஷப்படுகிறார்.
அவர் தன் கணவருடைய பொருளாதார இயலாமை, கல்வி போதாமை, தொழில் தோல்விகள் உள்ளிட்வை மீதான தன்னுடைய எந்த விமர்சனங்களையும் கருத்துக்களையும் மகள் மீது திணிக்காமல் வளர்த்திருக்கிறார் என்பதை இங்கு உற்றுநோக்கி கவனிக்க வேண்டும். அதனால்தான் அந்த மகள், தன் தந்தை தோற்கவில்லை என்று அந்த நிகழ்ச்சியில் வந்து கூறுகிறார், அந்த பெண் நினைத்திருந்தால் தன் கணவர் குறித்த தன்னுடைய பார்வையும் விமர்சனங்களையும் மகளுக்கு கடத்தி இருக்க முடியும். ஆனால் அவர் அதை செய்யவில்லை, அதற்கு மாறாக கணவருக்கு மகள் பரிசளிக்கும் போது அதையும் பார்த்து ஆனந்த கண்ணீர் விடவே செய்கிறார். இப்படியான வெள்ளந்தி மக்கள் இருக்கும் எளிய குடும்பங்கள் தான் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட நம் இந்திய சமூக குடும்பங்கள் என்று பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விஷயம் குறித்து கவிஞர் தாமரை சமூக வலைதள பதிவில், “அம்மாக்கள் இல்லையென்றால் குழந்தைகள் பள்ளிப் படிப்பைக் கூடத் தாண்டா என்று சில ஆண்டுகளுக்கு முன் எழுதினேன் (சொந்த அனுபவம்). படித்த தாயார் தன் குழந்தையைப் படிக்க வைக்க, கண்டிப்பாகத்தான் இருப்பார் - வீட்டிலுள்ள அனைவரிடமும்! அதையெல்லாம் பொதுவில், ஒரு கணத்தில் பார்த்து விட்டு பெண்களே இப்படித்தான் என்று எடை போடுவது தவறு! பெரும்பாலான பெண்கள் வீட்டுவேலையும் செய்து, படித்த படிப்புக்கு வெளிவேலையும் செய்து குழந்தை வளர்ப்பும் செய்து, இன்னும் பல செய்துகள். கடுமையும் விரைவுபடுத்தலும் இருந்தே தீரும். உண்மையில் இத்தகைய பெண்களால்தான் அந்தந்தக் குடும்பங்கள் ஒரு காலகட்டத்துக்குப் பிறகு தலைநிமிரும். அப்போதுதான் குழந்தைகளுக்கும் வீட்டில் மற்றவர்களுக்கும் அருமை தெரியும்.!” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் நயன்தார நடித்த ஐரா திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சர்ஜூன் கே.எம், “‘நீயா நானா’ல participate பண்றவங்க, சாதாரண குடும்பத்துல இருந்து வரவங்க. எல்லா reality showலயும் அப்படித்தான். அவங்களுக்கு Camera முன்னாடி நடிக்க தெரியாது.. ஒரு TV showல இப்படிதான் பேசனும்னு யாரும் சொல்லி கொடுத்திருக்கமாட்டாங்க. அந்த wife Political Correctness இல்லாம பேசிருக்காங்க. சரி. அதுக்காக அவங்கள ஏன் இப்படி தாக்கனும்? கோபினாத் நெனச்சிருந்தா அவங்கள அங்கயே அசிங்க படுத்திருக்கலாம். அவரு பண்ணல. அந்த கொறய நாம comments and postsல பூர்த்தி செய்றோம்.
நாமெல்லாம் எல்லாத்துலயும் Politically Correctஆவா இருக்கோம், பேசுறோம்? Chanceஏ இல்ல! Political correctness won’t imbibe in a person overnight. It takes years and years.” என குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்