"என் வாழ்க்கைய அழிச்சுட்டே".. பெண் மீது கவிஞர் தாமரையின் பகிரங்க குற்றச்சாட்டு!!.. பரபரப்பு பின்னணி"
முகப்பு > செய்திகள் > தமிழகம்37 வயதான பெண் ஒருவர் தான் தனது வாழ்க்கை சீரழிய காரணம் என கவிஞர் தாமரை குற்றஞ்சாட்டியுள்ள விஷயம், அதிக பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.
கோவையை சேர்ந்த வாலிபர். சென்னையை சேர்ந்தவர் பெண் ஒருவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்ததாக தகவல்கள் கூறுகின்றது. மேலும் இவர்களுக்கு 3 குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில், தனது நண்பர்கள் சிலருடன் மனைவி இருந்த ஆபாச புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர், அவரை வீட்டை விட்டு துரத்தி உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது. இதனைத் தொடர்ந்து, மீண்டும் அவர்கள் இருவரும் சமாதானமாகி சேர்ந்து வாழ்ந்த நிலையில் திடீரென அந்த வாலிபர் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் தெரிகிறது.
இது தொடர்பாக உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன் வாலிபர் பதிவு செய்த ஆடியோவில் சாக்கடையில் விழுந்து விட்டதாகவும், தனது நிலைக்கு தானே காரணம் என்றும் கூறி இருந்தார். இதனிடையே, உயிரிழந்த அந்த வாலிபரின் மனைவி தான் தனது வாழ்க்கையை கெடுத்த பெண் என கவிஞர் தாமரை பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்திருந்தார்.
இது தொடர்பான அவரது பேஸ்புக் பதிவில், "அந்த பெண் கோவை இளைஞனை 'நாடகத் திருமணம்' செய்து, தற்கொலைக்குத் தூண்டிய விவகாரம் பெரிதாக வெளிப்பட்டிருக்கிறது. அவர் இறப்பதற்குப் பலநாட்களுக்கு முன்பிருந்தே தனக்கும் அவளுக்குமிருந்த உறவு, அது வளர்ந்த விதம், சிதைந்த விதம், அவளது நம்பிக்கைத் துரோகம், பிற பாலியல் தொடர்புகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் முடிந்தவரை கோவையாகப் பேசி ஒலிப்பதிவு செய்து விட்டுப் போயிருக்கிறார். படங்களும் காணொலிகளும் உண்டு.
இவை அனைத்தும் கோவை காவல்துறையில் புகாரோடு ஆதாரங்களாகக் கொடுக்கப் பட்டிருக்கின்றன. காவல்துறை விசாரணையை ஆரம்பிப்பார்கள் என்று குடும்பத்தினர் காத்திருக்கின்றனர். பெரும் நம்பிக்கை மோசடி செய்து, பணநெருக்கடி கொடுத்து, அரசியல் தொடர்புகளைக் காட்டி அச்சுறுத்தி அந்த இளைஞனைத் தற்கொலைக்குத் தள்ளிய பெண் தண்டிக்கப்பட வேண்டியவர். காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நான் இதில் எங்கு வருகிறேன் என்றால், இந்த பெண் தான் 2012 இல் தியாகுவுடன் ஓடியவர் எனும் உண்மையைப் பதிவு செய்யுமிடத்தில் ! இப்போது உள்ளவர்களுக்கு 2011-13 இல் தியாகு மற்றும் அந்த பெண் என்ன செய்தார்கள் என்று தெரியாது. அதை வெளிக்கொண்டு வருவது, நேரடியாகப் பாதிக்கப்பட்ட என் போன்றோரின் கடமை!. இதைப் பார்ப்பவர்கள், படிப்பவர்கள் சிலரேனும் தியாகு, பெண் போன்ற 'அப்பாவி முகமூடி' அணிந்த ஆபத்தானவர்களின் பிடியில் வீழாமல் எச்சரிக்கை அடையக்கூடும். இதற்கிடையில், நான் இதை எழுதக் கூடாது, விட்டுவிட்டுப் போக வேண்டும், இது 'நடத்தையின்மேல் தாக்குதல்' ( charecter assassination) என ஒரு கும்பல் கிளம்பி வருகிறது. எனக்கு வாயைப் பொத்திக் கொண்டு சிரிப்பதா, வாய்விட்டுச் சிரிப்பதா என்றே தெரியவில்லை. இதெல்லாம் ஒரு கேரக்டர், இதை அசாசினேட் செய்ய ஒரு ஸ்குவாடு...
இதையெல்லாம் யாரும் assassinate செய்ய வேண்டாம், தங்களைத் தாங்களே செய்து கொள்வார்கள்/கொண்டார்கள்... எனக்கெல்லாம் எந்த வேலையும் வைக்காமல் தன்னால் வந்து மாட்டியது சிறப்பு ! தியாகுவுக்கு அரசியல் முகமூடி, போராளி அடையாளம் , அந்த பெண்ணுக்கு 'மீடியா ஆளுமை', 'முற்போக்கு' முத்திரை, இதை வைத்துத்தான் இவர்கள் தங்கள் வஞ்சக வணிகத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். வசூல் முக்கியமில்லையா ? இவர்கள் காட்டிலும் இதுவரை மழை பெய்து கொண்டுதான் இருந்தது, முட்டாள் தமிழர்கள் இருக்கும்வரை என்ன கவலை !!!" என குறிப்பிட்டு, இன்னும் பல புள்ளிகளையும் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கவிஞர் தாமரையின் பேஸ்புக் பதிவு, தற்போது பலர் மத்தியில் பரபரப்பையும் உண்டு பண்ணி உள்ளது.
மற்ற செய்திகள்