60 வயதானவருக்கு பிறவியிலேயே இருந்த சிக்கல்.. காவேரி மருத்துவமனை நிகழ்த்திய சாதனை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நிலையான இடுப்பு மூட்டு தமனியின் (PSA) குருதிநாள அழற்சி என்ற அரிதான பிறவிப் பிறழ்வு இருந்த 60 வயது நபருக்கு காவேரி மருத்துவமனையில் வெற்றிகரமாக சிகிச்சை நடைபெற்றிருக்கிறது.

60 வயதானவருக்கு பிறவியிலேயே இருந்த சிக்கல்.. காவேரி மருத்துவமனை நிகழ்த்திய சாதனை..!

தமிழ்நாட்டில் பன்முக சிறப்பு பிரிவுகளுடன் செயல்படும் காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு அங்கமான சென்னை காவேரி மருத்துவமனை, நிலையான இடுப்பு மூட்டு தமனியின் (PSA) குருதிநாள அழற்சி என்ற அரிதான இரத்தநாள பிறழ்வால் பாதிக்கப்பட்ட 60 வயதான நபருக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதை இன்று பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறது.

வளர்கருவின் பெருந்தமனியிலிருந்து இந்த இடுப்பு மூட்டுத்தமனி (Sciatic Artery) தொடங்குகிறது. இது பிட்டத்தின் பின்பகுதி மற்றும் கால்கள் வழியாக செல்கிறது. இதுவே கால்களுக்கு பிரதானமாக இரத்தத்தை வழங்கும் பெரிய இரத்தக் குழாயாகும். பிறப்புக்குப் பின் குழந்தை வளரும்போது கால்களுக்கு இரத்தத்தை எடுத்துச்செல்லும் புதிய நிரந்தர தமனியான ஃபெமோரல் எனப்படும் தொடைத்தமனி உடலில் உருவாகும். அதன்பிறகு இடுப்பு மூட்டுத் தமனி விரைவிலேயே மறைந்துவிடும்.

பிறக்கும்போது இருக்கும் இந்த இடுப்பு மூட்டு தமனி, வயது வந்த நபர்களிடம் தொடர்ந்து இருப்பதில்லை. மறையாமல் அது உடலில் இருக்குமானால், சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கும். ஏனெனில், அமரும்போது இந்த தமனி அழுத்தத்திற்குள்ளாக்கப்பட்டு, சேதமடைவதால் குருதிநாள அழற்சி மற்றும் இரத்த உறைவுக் கட்டிகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

இந்நிலையில், கடுமையான வலி, வலது பிட்டத்தில் துடிப்பு மற்றும் வலது காலின் பெருவிரலில் கருப்பாக நிறம் மாற்றம் ஆகிய பிரச்சனைகளோடு காவேரி மருத்துவமனையில் உள்ள இரத்தநாள மற்றும் குருதிக்குழாய் அறுவைசிகிச்சை துறைக்கு 60 வயதான இந்த ஆண் நோயாளி, சிகிச்சைக்கு வந்திருக்கிறார். அவரது பிட்டத்தில் இருந்த வலியின் காரணமாக நீண்டநேரம் அமர்ந்திருப்பது அல்லது நடப்பதும் அவருக்கு மிகப்பெரிய சிரமமாக இருந்தது. அவருக்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவரது வலது பிட்டத்தில் துடிப்புடன் கூடிய வீக்கம் இருப்பதும் மற்றும் வலது காலின் பெருவிரலில் தசை / திசு அழுகியிருப்பதும் கண்டறியப்பட்டது.

இரத்தநாள மற்றும் குருதிக்குழாய்கள் அறுவைசிகிச்சை துறையின் தலைவர் பேராசிரியர் மருத்துவர் N. சேகர் அவர்கள் இதுகுறித்து பேசுகையில், "இந்நோயாளிக்கு ஒரு ஆஞ்சியோகிராம் சோதனை செய்யப்பட்டது. ஒரு நிலையான இடுப்பு மூட்டு தமனியில் இரத்த உறைவுடன் கூடிய ஒரு பெரிய குருதிநாள அழற்சி இருப்பது இச்சோதனையில் தெரிய வந்தது. அவரது தொடையில் தொடைத்தமனி இல்லாததும் கண்டறியப்பட்டது. இடுப்பு மூட்டு தமனியானது, முழங்கால் வரை கீழ்நோக்கி செல்வதும் மற்றும் காலிலுள்ள தமனிகளோடு இணைந்திருப்பதும் ஆஞ்சியோகிராம் சோதனையில் அறியப்பட்டது. அவரது கால் பகுதியில் இரத்த ஓட்ட பராமரிப்புடன் ஒரு ஹைபிரிட் மருத்துவ செயல்முறை இந்நோயாளிக்கு செய்யப்பட்டது. பிறழ்வுள்ள தமனி மற்றும் குருதிநாள அழற்சியை ஒரு இரத்தநாள அடைப்பானைப் பயன்படுத்தி அடைத்ததோடு ஒரு பைபாஸ் அறுவை சிகிச்சையும் (தொடை எலும்பின் முழங்கால் குழிச்சிரையில் செய்யப்படும் பைபாஸ் அறுவைசிகிச்சை, கீழ்ப்புற காலுக்கு இரத்தம் செல்வதற்கு புதிய பாதையை உருவாக்குகிறது) இச்செயல்முறையில் இடம்பெற்றன. அதன்பிறகு படிப்படியாக குணமடைந்த இந்நோயாளி இப்போது வலியிலிருந்து முற்றிலும் விடுபட்டிருக்கிறார். சதை அழுகலினால் பாதிக்கப்பட்ட அவரது பெருவிரலும் துண்டித்து அகற்றப்படுவதிலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறது.

இந்த பாதிப்புநிலை மற்றும் வழங்கப்பட்ட சிகிச்சை குறித்துப் பேசிய சென்னை - காவேரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மற்றும் இணை நிறுவனர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ், "நிலைக்கின்ற இடுப்பு மூட்டு தமனி என்பது, பிறவியிலேயே ஏற்படுகின்ற ஒரு அரிதான இரத்தநாள பிறழ்வு குறைபாடாகும். ஒரு இலட்சம் நபர்களில் ஒரு நபருக்கு இதுபோன்று நிகழ்வதுண்டு. இப்பாதிப்பில் அறிகுறிகள் அரிதாகவே வெளிப்படும். அறிகுறி இருக்கும்போது நோய் பாதிப்பிற்கான காரணத்தை கண்டறிவதும் சிரமமானது. குருதிநாள அழற்சி உருவாக்கம் (ஒரு தமனியின் சுவர் பலவீனமடையும்போது இயல்புக்கு மாறான ஒரு பெரிய வீக்கம் ஏற்படுவது) மற்றும் காலில் குருதி ஓட்டக்குறைவு (குறைந்திருக்கும் இரத்தஓட்டம்) ஆகிய சிக்கல்கள் இதனால் நிகழக்கூடும். காலில் கடும் பாதிப்பை இது விளைவிக்கும் மற்றும் சில சமயங்களில் காலை துண்டித்து அகற்றும் நிலை கூட ஏற்படலாம். இந்நோயாளியைப் பொறுத்தவரை குருதிநாள அழற்சியில் இரத்தஉறைவு கீழ்நோக்கி சென்றிருந்தது. அவரது காலில் பெருவிரலில் தசை / திசு அழுகலுக்கான காரணமாக இருந்திருக்கிறது.

நோய்க்கான காரணத்தை அறியும் செயல்பாடு மிகச்சரியாக செய்யப்பட்டதால் இந்த பிறவிக்குறைபாடுக்கு எங்களால் சிகிச்சை அளிக்க முடிந்தது மற்றும் கடுமையான சிக்கல்கள் ஏற்படாமல் தவிர்ப்பது சாத்தியமானது. இந்நோயாளிக்கு பயனளிக்கக்கூடிய வகையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தியதற்காக இரத்தநாள மற்றும் குருதிக் குழாய்கள் அறுவை சிகிச்சை துறையின் தலைவர் பேராசிரியர், டாக்டர் N. சேகர் மற்றும் அவரது குழுவினரை நான் மனமார பாராட்டுகிறேன்." என்று கூறினார்.

KAUVERY HOSPITAL, CHENNAI, TREATMENT

மற்ற செய்திகள்