தென்னிந்திய அளவில் மேம்படுத்தப்பட்ட இதயம் & நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.! பிரபல ஹெல்த்கேர் நிறுவனத்துடன் கைகோர்க்கும் காவேரி மருத்துவமனை.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இதயம் மற்றும் நுரையீரல் மாற்று சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனை சென்னை ஆஸ்டர் மெட் சிட்டி கொச்சியுடன் இணைந்துள்ளது.
சென்னை, 10 ஜனவரி 2023: தமிழ்நாட்டின் முன்னணி மல்டி ஸ்பெஷாலிட்டி ஹெல்த்கேர் செயினாக விளங்கி வரும், காவேரி குழும மருத்துவமனைகளின் ஒரு பிரிவான, சென்னை, காவேரி மருத்துவமனை, தென்னிந்தியாவில் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை மேம்படுத்த ஆஸ்டர் மெட் சிட்டி கொச்சியுடன் ஒருங்கிணைந்துள்ளது.
ஆஸ்டர் மெட் சிட்டி என்பது கொச்சியில் உள்ள தென்னிந்தியாவின் மிகப்பெரிய குவாட்டர்னரி ஹெல்த்கேர் சென்டர். இது ஹெல்த்கேர் கூட்டு நிறுவனமான ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேரின் முதன்மை மருத்துவமனையாகும். காவேரி மருத்துவமனையுடனான இந்த ஒருங்கிணைவின் மூலம், கொச்சியில் உள்ள அவர்களின் அதிநவீன வசதியில் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை வசதி, காவேரி மருத்துவமனையின் நிபுணர் மருத்துவக் குழுவுடன் இணையும்.
சென்னை காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குனரான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ், ஆஸ்டர் மெட்சிட்டி உடனான இந்த தொடர்பைப் பற்றி பேசுகையில், “இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் படிப்படியாக வேகமடைந்து வருகின்றன, ஆனால் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் இன்னும் பின்தங்கிய நிலையில் உள்ளன. இறந்தவர்களின் குடும்பங்கள் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வராதது, சில மருத்துவமனைகளில் அதிக தகுதி வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு இல்லாதது , மிக முக்கியமாக பெரிய அளவில் சிக்கலான மருத்துவ செயல்முறையைச் செய்வதற்கு ஏற்ற உள்கட்டமைப்பு இல்லாதது ஆகியவை சில சவால்களாக உள்ளன.
ஆனால் சென்னை, காவேரி மருத்துவமனையில் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று சிகிச்சைக்கான மருத்துவக் குழுவில், மிகவும் தகுதி வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் சர்வதேச தரத்தின்படி சிறப்புத் திறமையும் பயிற்சியும் பெற்ற துணை மருத்துவர்கள் உள்ளனர். இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதில் சமீபத்திய முன்னேற்றங்களையும் நாங்கள் பெற்றுள்ளோம். அறுவை சிகிச்சைக்கு முந்தைய பராமரிப்பு முதல், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு வரை மாற்று சிகிச்சை பெறுபவருக்கு அனைத்து கோணங்களிலும் தேவைப்படும் கவனிப்பையும் எங்கள் குழு வழங்குகிறது.
எனவே இந்த இணையற்ற நிபுணத்துவம் மற்றும் ஆதரவை முன்னணி சுகாதார நிறுவனங்களில் ஒன்றான கொச்சியில் உள்ள Aster Med Cityக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த சங்கமத்தின் மூலம் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட நிபுணத்துவத்தை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என குறிப்பிட்டுள்ளார்.
Aster Medcity-ஐச் சேர்ந்த Aster Hospitals Kerala & Tamilnadu பிராந்திய இயக்குநர் Farhaan Yasin இதுபற்றிக் கூறுகையில், “கேரளாவில் உடல் உறுப்பு தானம் இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது, உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இல்லாததே இதற்குக் காரணம். முழு உடல் உறுப்பு தானம் 8 உயிர்களை காப்பாற்றும், இந்த விழிப்புணர்வை பரப்பி, உறுப்பு தானம் பற்றிய கட்டுக்கதைகளை முறியடித்து வருகிறோம். ஆஸ்டரில், எங்களிடம் அதிநவீன உள்கட்டமைப்பு உள்ளது. அத்துடன் நாங்கள் சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் செயல்படுகிறோம். எனவே, தென்னிந்தியாவின் மிகவும் நம்பகமான சுகாதார நிறுவனங்களில் ஒன்றான காவேரி மருத்துவமனையின் உயர்நிலை நிபுணத்துவத்துடன் இணைந்து, இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் அதிகமான நோயாளிகளுக்கு எங்களது இந்த ஒருங்கிணைவு பலனளிக்கும், பல உயிர்களைக் காப்பாற்றும் என்று நாங்கள் நம்புகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்