நவீன மருத்துவ முறை மூலம் இதய துடிப்பு பிரச்சனைகளை குணப்படுத்தும் காவேரி மருத்துவமனை

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை:  தொடர் சோர்வு, அதிவேக இதயத்துடிப்பு (படபடப்பு) மற்றும் கிறுகிறுப்பு ஆகியவை இதய துடிப்பு பிரச்சனைகளின் சில அறிகுறிகளாகும். பிறவி இதய நோய்களுக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கும் நபர்கள் மத்தியில் இப்படியான இதய துடிப்பு பிரச்சனை பொதுவாக காணப்படுகிறது.

நவீன மருத்துவ முறை மூலம் இதய துடிப்பு பிரச்சனைகளை குணப்படுத்தும் காவேரி மருத்துவமனை

images may subject to © copyright.

இந்நிலையில் தமிழ்நாட்டின் முன்னணி சங்கிலித்தொடர் மருத்துவனை குழுமங்களுள் முதன்மையான  காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு அங்கமான சென்னை, காவேரி மருத்துவமனை, இயல்புக்கு மாறான இதய துடிப்பு பிரச்சனையால் அவதிப்பட்ட 75 வயது மூதாட்டிக்கு, குறைந்த ஊடுருவல்  உள்ள கதிரியக்க அதிர்வெண் நீக்கம் (RFA) என்ற மருத்துவ செயல்முறையை வெற்றிகரமாக மேற்கொண்டு குணப்படுத்தியிருக்கிறது.  இதயத்தின் இயல்பான செயலாக்கத்தில் இடையூறு / தொந்தரவு இருக்கும் நிலையே இதயத் துடிப்பின்மை என அழைக்கப்படுகிறது.   அதிவேக இதயத்துடிப்பு விகிதம் (tachycardia) அல்லது மிகக்குறைந்த இதயத் துடிப்பு விகிதம் (bradycardia) அல்லது சீரற்ற இதயத்துடிப்புகள் போன்ற இயல்புக்கு மாறான இதயத்துடிப்பு விகிதத்தை இந்நிலை மேலும் ஏற்படுத்துகிறது.

அதன்படி இப்பெண்மணிக்கு 30 வயது இருந்தபோது, ஒரு சிக்கலான இதய அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருந்தது. பிறவியிலேயே இருந்த இந்த இதய குறைபாட்டினால், இப்பெண்ணின் இதயத்தின் மேல் பகுதியில் 3 அறைகள் இருந்தன. வழக்கமாக நமது இதயத்தில்  2 மேலறைகளும், 2 கீழறைகளும் இருக்கும்.  சமீப காலமாக, மிக அதிகமான களைப்பும், படபடப்பும், கிறுகிறுப்பும் இப்பெண்ணுக்கு இருந்து வந்தது.  இத்தகைய அறிகுறிகளால் அவதிப்படும் நபர்கள் பெரும்பாலான நேரங்களில் உரிய காலஅளவிற்குள் தங்களுக்கு இருக்கும் நோய் பாதிப்பு என்னவென்று மருத்துவ சோதனைகளின் மூலம் கண்டறிவதில்லை.  இது அவர்களது உடல்நிலையை மோசமாக்கி பல சிக்கல்கள் ஏற்பட வழிவகுக்கிறது. 

இதுகுறித்து, காவேரி மருத்துவமனையின் இருதயநோய் நிபுணர் டாக்டர் சக்திவேல் குறிப்பிடும்போது, “சீரற்ற இதயத்துடிப்பு பிரச்சனைகள் இருப்பதை ஈசிஜி பரிசோதனை அறிக்கைகள் வெளிப்படுத்தின. இதற்கு சிகிச்சை அளிப்பதற்காக தணிப்பு (ablation) மருத்துவ செயல்முறை அவசியமாக இருந்தது. இத்தகைய பாதிப்புள்ள நோயாளிகளுக்கு மருந்துகளின் மூலம் சிகிச்சை அளிப்பதைவிட குறைந்த ஊடுருவல் மருத்துவ செயல்முறை அதிக திறனுள்ளதாகவும், பயனளிப்பதாகவும் இருக்கிறது. இருந்தபோதிலும் இதற்கு முன்னதாகவே, பிறவி குறைபாட்டை சரிசெய்வதற்கான ஒரு திறந்தநிலை இதய அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருக்கும் ஒரு நோயாளிக்கு இந்த மருத்துவ செயல்முறையை மேற்கொள்வது மிகவும் சிரமமானது; இதில் அதிக இடர்வாய்ப்புகள் இருக்கின்றன”, என்று கூறியுள்ளார்.

குறைவான ஊடுருவல் மருத்துவ செயல்முறையானது, ஒரு 3D இதய மேப்பிங் அமைப்பு முறையை பயன்படுத்துகிறது. தீங்கு விளைவிக்கும் சாத்தியமுள்ள எக்ஸ்-ரே-க்களை பயன்படுத்தாமல் இயல்புக்கு மாறான மின்சார சமிஞ்சைகள் இருக்கும் இதயத்தின் நோய் பாதிப்புள்ள பகுதியை கண்டறிவதற்கு இந்த மேப்பிங் உதவுகிறது. ஒரு ஹை டெஃபனிஷன் (HD) மேப்பிங் கத்தீட்டர், இடுப்பு கவட்டை பகுதிகளிலிருந்து இதயத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. மற்றும் இதய இலய இடையூறுகளை விளைவிக்கும் இயல்புக்கு மாறான மின் சுற்றை தணிப்பதற்கு ரேடியோ-அதிர்வெண் (RF) அலை பயன்படுத்தப்படுகிறது.

kauvery hospital cures Heart Rhythm problems advance procedure

இச்சிகிச்சையின் வெற்றி குறித்து பேசிய சென்னை காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயலாக்க இயக்குனர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ், “வயதின் காரணமாக சிக்கல்கள் வரும் இடர்வாய்ப்பின் காரணமாக எந்தவொரு மருத்துவ செயல்முறையையும் செய்துகொள்வதற்கு வயது முதிர்ந்த நபர்கள் மத்தியில் அதிக அளவு தயக்கமும், சந்தேகமும், அச்சமும் இருக்கிறது. உடல்நல பராமரிப்பு தொழில்துறையில் புரட்சிகரமான, உயர் நேர்த்தி மிக்க தொழில்நுட்ப சாதனங்களை எமது நவீன மருத்துவமனை கொண்டிருக்கிறது; குறைவான காலமே மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதை இது சாத்தியமாக்குகிறது.

அத்துடன், சிறப்பான சிகிச்சை விளைவுகளை கொண்டிருக்கிற குறைவான ஊடுருவல் முறையிலான அறுவை சிகிச்சைகளை திறம்பட செய்வதற்கு இது உதவுகிறது. இந்த குறைந்த ஊடுருவல் மருத்துவ செயல்முறை, பாதிப்பு நிலையை குணமாக்க உதவுகிற ஒரு செயல்முறையாக இருப்பது குறிப்பிடத்தக்கது. மிகச் சமீபத்திய இத்தொழில்நுட்ப உத்தியை பயன்படுத்தி இப்பெண்மணிக்கு சிகிச்சையளித்து முழுமையாக குணப்படுத்தியிருக்கிற டாக்டர் சக்திவேல் மற்றும் அவரது குழுவினரை நான் பெரிதும் பாராட்டுகிறேன். வயது முதிர்ந்த இப்பெண்மணியின் பிரச்சனைகள் சரிசெய்யப்பட்டு, தரமான வாழ்க்கையை வாழ்வது இந்த வெற்றிகர சிகிச்சையின் மூலம் சாத்தியமாகியிருக்கிறது,” என்று கூறினார்.

வெற்றிகரமாக நடைபெற்ற இந்த மருத்துவ செயல்முறை நடைபெற்ற நாளிலிருந்து 3வது நாளன்று இப்பெண்மணி மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதய துடிப்பின்மை பிரச்சனையிலிருந்து இப்பெண்மணி மீண்டிருக்கிறார்; இப்பிரச்சனைக்காக இதுவரை அவர் எடுத்துக்கொண்டிருந்த மருந்துகளும் இப்போது நிறுத்தப்பட்டுவிட்டன.

HEART RHYTHM PROBLEMS, ADVANCED MINIMALLY INVASIVE PROCEDURES, HEALTH, HOSPITAL, DOCTOR, KAUVERY HOSPITAL

மற்ற செய்திகள்