'கொரோனா'வை விட இதுதான் ரொம்ப 'கஷ்டமா' இருக்கு... கொதிக்கும் 'சென்னை' மக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. நாடு முழுவதும் ஒருசில துறைகளுக்கு மட்டும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா அதிகம் பரவும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகமும் இருப்பதால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

'கொரோனா'வை விட இதுதான் ரொம்ப 'கஷ்டமா' இருக்கு... கொதிக்கும் 'சென்னை' மக்கள்!

இந்த நிலையில் கொரோனாவை விட சென்னையில் அடிக்கும் வெயிலை சமாளிப்பது தான் மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது என சென்னை மக்கள் வேதனை கொள்கின்றனர். கடந்த 4-ம் தேதி ஆரம்பித்த கத்திரி வெயில் நாள்தோறும் சதமடித்து மக்களை துன்புறுத்தி வருகிறது. இதனால் டெலிவரி வேலை செய்பவர்கள், கூலி தொழிலாளர்கள், காய்கறி விற்பனை செய்பவர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக மதிய நேரங்களில் வெயில் உக்கிரமாக இருப்பதால் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டால் வேயப்பட்ட வீடுகளில் குடியிருப்போரை வீட்டைவிட்டு வெளியில் தலைதெறிக்க ஓடச்செய்கிறது. அடுத்த 24 நாட்களுக்கு கத்திரி வெயில் இருக்கும் என்பதால் மக்கள் மனதில் வெயில் குறித்த அச்சமும் தற்போது ஏற்பட்டுள்ளது.