'நாகர்கோயில் காசி வழக்கில் புதிய திருப்பம்: காசியின் தந்தையை திடீரென கைது செய்தது போலீஸ் - காரணம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்பல பெண்களை மோசடி செய்த கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலை சேர்ந்த காசியின் தந்தை தற்போது கைது செய்யப்பட்ட செய்தி வெளியாகியுள்ளது.

நாகர்கோயில் மாவட்டத்தை சேர்ந்த காசி என்னும் இளைஞர் சமூகவலைத்தளங்கள் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை தன் பேச்சின் மூலமாக வசீகரித்து அவர்களிடம் பல்வேறு பொருட்களை பறித்துள்ளார்.
மேலும் காதலிப்பதாக நம்ப வைத்து அவர்களோடு தனியாக இருப்பதை ஆபாச படங்கள் எடுத்து அவற்றை வைத்து மிரட்டி பணம் பறித்ததாக பல்வேறு குற்றசாட்டுகள் கூறப்படுகிறது. மேலும் சென்னை மருத்துவர் அளித்த புகார் மூலம் காசி கைது செய்யப்பட்டார். மேலும் அவர் மீது ஒரு போக்சோ வழக்கு, 2 பாலியல் பலாத்கார வழக்கு, ஒரு கந்துவட்டி வழக்கு என ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில் காசி மீது சுமத்தப்பட்ட பாலியல் வழக்கின் தடயங்களை அழித்ததாக கூறி தற்போது காசியின் தந்தை தங்கபாண்டியனை போலீசார் கைது செய்துள்ளனர்.
TRENDING NEWS
மற்ற செய்திகள்
LATEST VIDEOS