ரொம்ப காஸ்ட்லி 'மெரட்டி' வாங்கிக்கிட்டாரு... அந்த கேஸையும் 'தோண்டியெடுத்த' சிபிசிஐடி போலீஸ்... என்ன காரணம்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பெண்களை ஆபாச படமெடுத்து மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் பறித்த குற்றத்துக்காக நாகர்கோயிலை சேர்ந்த காசி என்பவரை போலீசார் சில மாதங்களுக்கு முன் கைது செய்தனர். இதில் காசிக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர்கள் டேசன் ஜினோ, தினேஷ் ஆகியோரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

ரொம்ப காஸ்ட்லி 'மெரட்டி' வாங்கிக்கிட்டாரு... அந்த கேஸையும் 'தோண்டியெடுத்த' சிபிசிஐடி போலீஸ்... என்ன காரணம்?

இதற்கிடையில் டிராவிட் என்பவர் ஒரு புகார் அளித்தார். அதாவது காசியிடம் தான் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதற்காக அவர் கூடுதல் வட்டி கேட்டு மிரட்டியதோடு, வாங்கிய பணத்துக்கு ஈடாக டிராவிட்டின் விலையுயர்ந்த பைக்கை எழுதி வாங்கிக் கொண்டாக புகாரில் கூறப்பட்டு இருந்தது. அதன்பேரில் காசி மீது கந்து வட்டி வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் கந்துவட்டி வழக்கில் சிபிசிஐடி போலீஸ் விசாரணை தற்போது வேகமெடுத்து உள்ளது. இதற்காக வங்கி அதிகாரிகள், வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மேலும் பைக்கை காசி பெயருக்கு மாற்ற உதவி புரிந்த புரோக்கர் நாராயணன் மற்றும் காசியின் தந்தை தங்கபாண்டியன் ஆகியோர் மீதும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

தற்போது கந்து வட்டி வழக்கு தொடர்பாக நாகர்கோவிலில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 1-வது கோர்ட்டில் நேற்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சுமார் 1,250 பக்கங்கள் கொண்ட அந்த குற்ற பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்து உள்ளனர். இதனால் காசி மீதான வழக்கு விசாரணை மீண்டும் வேகமெடுத்து இருக்கிறது.

மற்ற செய்திகள்