'வெறும் 20 சொன்னாலே போதும்...' 'சொல்லிட்டீங்கன்னா பெட்ரோல் இலவசம்...' 'டேய் பசங்களா கிளம்புங்க, பெட்ரோல் பம்ப் போவோம்...' - பட்டைய கிளப்பும் இலவச பெட்ரோல் திட்டம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கரூர் மாவட்டம், வள்ளுவர் நகர் பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க் நடத்தி வரும் நிறுவனம், தங்கள் பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் போட வருவோர் 10 குறளை சொன்னால் அரை லிட்டர் பெட்ரோலும், 20 திருக்குறள் சொன்னால் 1 லிட்டர் பெட்ரோலும் இலவசமாக வழங்கப்படும் என பெட்ரோல் பங்க் நிர்வாகம் அறிவித்தது.
இந்தப் போட்டியில், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என நிர்வாகம் தெரிவித்தது. இதனையடுத்து பெட்ரோல் போட வருவோர் தங்கள் வீடுகளில் இருக்கும் குழந்தைகளை திருக்குறள் படிக்க வைத்து பணம் இல்லாமல் அரை லிட்டர் முதல் 1 லிட்டர் பெட்ரோலை வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து கூறிய தனியார் பெட்ரோல் நிறுவனம், 'எங்களுக்கு நீண்ட நாட்களாகவே இந்த திருக்குறள் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று ஆசை. இன்றைய பெரும்பான்மையான மாணவர்களிடம் தமிழ் வாசிப்பதும், பேசுவதும் குறைந்து வருகிறது. மேலும் மக்களிடையே திருக்குறளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த இலவச பெட்ரோல் திட்டம் அறிவிக்கப்பட்டது. பல மாணவர்கள் பெட்ரோலுக்காக மட்டுமல்லாமல் தங்களின் திறமையை வெளிக்காட்டவும் இந்த போட்டியில் பங்கு கொள்கின்றனர்.' என பெருமிததோடு பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.
மற்ற செய்திகள்