'அவளுக்கு ஏன் இப்படி நடக்கணும்'.. 'அவ இல்லாத க்ளாஸ் ரூம்ல..'.. கலங்கிய தோழிகள்.. +2 மாணவிக்கு நேர்ந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கரூர் நகராட்சிக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வந்த 17 வயது ப்ளஸ் 2 மாணவி கோமதி, வகுப்பு தொடங்கும் முன்னர் உண்டான திடீர் மயக்கத்தின் காரணமாக சுருண்டு விழுந்தார். அவருக்கு உடனே பள்ளி ஆசிரியர்கள் முதலுதவி செய்தனர்.
அதன் பின்னர் கரூர் அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவியின் உயிர் பிரிந்துவிட்டது. இதனையடுத்து அம்மாவட்ட கலெக்டர், காவல் கண்காணிப்பாளர், அரசு மருத்துவக் கல்லூரி டீன் உள்ளிட்டோர் விரைந்து வந்து, விசாரித்தனர்.
இதனிடையே மாணவியின் இறப்பு மர்மமாக இருந்ததாக மாணவியின் உறவினரும், பெற்றோரும் மறியல் செய்தனர். ஆனால் பிரேத பரிசோதனையில் மாணவிக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்ததால், நாடித்துடிப்பு குறைந்து உயிரிழந்திருக்கலாம் என்று தெரியவந்ததை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.
இதனிடையே மாணவி கோமதி ஈ, எறும்புக்கு கூட துரோகம் இழைக்க மாட்டாள்; எல்லா ஆசிரியர்களுக்கும் பிடித்தவள், நன்றாக படிப்பாள், அவள் இல்லாத வகுப்பறையில் வெறுமை சூழ்ந்திருப்பதை நாங்கள் எப்படி பார்க்க போகிறோம்? யாருக்கும் தீங்கு நினைக்காத அவளுக்கு ஏன் இப்படி ஆக வேண்டும் என்று கோமதியின் தோழிகள் கதறியுள்ளனர்.