கர்நாடக வனத்துறையினர் சுட்டதில் தமிழக மீனவர் மரணம்.. இருமாநில எல்லையில் பரபரப்பு.. போக்குவரத்து நிறுத்தமா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். இதனால் இரு மாநில எல்லையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடக வனத்துறையினர் சுட்டதில் தமிழக மீனவர் மரணம்.. இருமாநில எல்லையில் பரபரப்பு.. போக்குவரத்து நிறுத்தமா?

                         Images are subject to © copyright to their respective owners.

தமிழக கர்நாடக எல்லையில் அடிப்பாலாறு எனப்படும் நதி ஓடுகிறது. பாலாறு, காவிரி ஆற்றுடன் இணையும் அடர்ந்த வனப் பகுதியில் பல வகையான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் மீன்வளம் அதிகம் என்பதால் மீன்பிடி தொழிலும் பலர் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் வனப்பகுதிக்குள் நுழைந்து சிலர் மான் வேட்டையிலும் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கடந்த 14ஆம் தேதி கொளத்தூர் காரைக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா, செட்டி பெட்டியைச் சேர்ந்த ரவி, இளையபெருமாள் உள்ளிட்ட நான்கு பேர் பரிசலில் மீன் பிடிக்க சென்றிருக்கின்றனர். அப்போது கர்நாடகா வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மான் வேட்டையிலும் இவர்கள் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

Images are subject to © copyright to their respective owners.

அப்போது கர்நாடக வனத்துறையினர் இவர்களை சுற்றி வளைத்து துப்பாக்கி சூடு நடத்தியதில் ராஜாவின் மீது குண்டு பாய்ந்து இருக்கிறது. அங்கிருந்து தப்பிய ரவி மற்றும் இளையபெருமாள் வீடு திரும்பிய நிலையில் இது குறித்து தங்களது உறவினர்களிடத்தில் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் ராஜாவின் உடல் பாலாற்றில் கரைஒதுங்கி இருக்கிறது. சம்பவ இடத்திற்கு சென்ற ஈரோடு மாவட்ட போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

ராஜாவின் உடல் சேலம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனிடையே, ராஜா உள்ளிட்டோர் மான் வேட்டையில் ஈடுபட்டதாகவும் மேலும் தங்களை தாக்கியதாகவும் கர்நாடக வனத்துறையினர் அம்மாநில காவல்துறையில் தெரிவித்திருக்கின்றனர். கர்நாடக வனத்துறையினரால் தமிழக மீனவர் சுடப்பட்ட சம்பவம் இரு மாநில எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் இரு மாநில எல்லையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

TAMIL, FISHERMAN, KARNATAKA, FOREST

மற்ற செய்திகள்