Naane Varuven M Logo Top
PS 1 M Logo Top

"கழுத்துல போர்டு, கையில் தட்டு".. ரூ.80,000 வருமானமா..?".. யாசகம் செய்யும் இளைஞர்கள்.. பாராட்ட வைக்கும் பின்னணி!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இன்றைய காலத்தில், வித்தியாசமாக ஒருவர் செய்யும் விஷயங்கள், நிச்சயம் இணையத்தில் பெரிய அளவில் வைரலாகும்.

"கழுத்துல போர்டு, கையில் தட்டு".. ரூ.80,000 வருமானமா..?".. யாசகம் செய்யும் இளைஞர்கள்.. பாராட்ட வைக்கும் பின்னணி!!

Also Read | ராகுலை பாத்ததும்.. திடீர்ன்னு சிறுமி செஞ்ச விஷயம்.. கூட்டத்துக்கு மத்தியில் நடந்த சம்பவம்!!

அந்த வகையில், மக்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக பலரும் வித்தியாச வித்தியாசமான விஷயங்களை செய்து இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் யாசகம் செய்வது போல பொது இடங்களில் வலம் வரும் விஷயமும், அதன் பின்னால் உள்ள காரணமும் பலரையும் சபாஷ் போட வைத்துள்ளது.

kanyakumari youngsters as beggars to create awareness

கல்யாண கோலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக, பேருந்து நிலையத்தில் வலம் வந்த இளைஞர்கள், தற்போது யாசகம் செய்பவர்களை போல வலம் வந்துள்ளனர். யாசகம் செய்பவர்களை போல உடை அணிந்து, கழுத்தில் அட்டை ஒன்றை போட்டுக் கொண்டு பேருந்து நிலையத்தில் உள்ள அனைவரிடமும் யாசகம் கேட்டு வருகின்றனர். ஜெனிஷ் மற்றும் சுனிஷ் ஆகிய இரண்டு இளைஞர்கள் தான் இப்படி யாசகம் செய்வது தொடர்பான வீடியோவை தங்களது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.

kanyakumari youngsters as beggars to create awareness

அதே வேளையில், இதற்கு பின்னால் உள்ள காரணம் தான் தற்போது பலரது பாராட்டுகளையும் இளைஞர்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளது. NGO ஒன்றிற்காக, இப்படி ஒரு விழிப்புணர்வு வீடியோவை அவர்கள் உருவாக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. யாசகம் இல்லா குமரி, யாசகருக்கு மறுவாழ்வு என்ற ஒரு கான்செப்ட்டின் பெயரில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தான் இப்படி ஒரு வீடியோவை அவர்கள் உருவாக்கி உள்ளனர்.

யாரும் யாசகம் செய்து பிழைப்பு நடத்த வேண்டாம் என்றும் அப்படி நடத்துபவர்கள் ஒரு நல்ல வாழ்க்கையை தேடிக்கொண்டு மறுவாழ்வு அமைக்க வேண்டும் என்பதுதான் இவரது விழிப்புணர்வு வீடியோவின் நோக்கம். மேலும் அவர்கள் கழுத்தில் இருந்த போர்டில் ஆட்கள் தேவை என்ற வாசகமும், வேலை என்ற இடத்தில் பிச்சை எடுத்தல் என்ற வாசகமும் அது குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல, கல்வி தேவையே இல்லை என்றும், வருமானம் 80 ஆயிரம் வரை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

kanyakumari youngsters as beggars to create awareness

யாசகம் செய்பவர்களுக்கு எதுவும் வழங்காமல் அவருக்கு மறுவாழ்வு அமைக்கும் வகையில் இந்த NGO-வை தொடர்பு கொண்டு அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைக்க வழி செய்ய வேண்டும் என்றும், ஊனமுற்றவர்கள் உள்ளிட்டோர் யாசகம் செய்தாலும் அவர்களையும் காப்பகத்தில் கொண்டு சேர்க்க உதவி செய்ய வேண்டும் என்றும் மக்களுக்கு அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதன் மூலம் யாசகம் இல்லா குமரியை உருவாக்க முடியும் என்பது தான் அந்த இளைஞர்கள் மற்றும் என்ஜிஓவின் நோக்கமாக உள்ளது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் அதே வேளையில் அதனை மிகவும் வேடிக்கையாக மக்களுக்கு எளிதாக போய் சேரக்கூடிய வழியில் இளைஞர்கள் எடுத்த முயற்சி தான் தற்போது இந்த வீடியோவின் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது.

Also Read | இன்ஸ்டாவில் இளைஞர்களை Follow செய்த காதலி.. கோபத்துல இளைஞர் எடுத்த முடிவு.. நவராத்திரி திருவிழாவில் நடந்த திக்.திக்..சம்பவம்..!

KANYAKUMARI, YOUNGSTERS, BEGGARS, CREATE AWARENESS

மற்ற செய்திகள்