புதைக்கப்பட்ட அண்ணன் உடல்.. 18 நாட்கள் கழித்து தம்பி செய்த விஷயம்.. அதிர வைத்த சம்பவம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்கன்னியாகுமரி மாவட்டம், கிராத்தூர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ஜெஸ்டஸ். இவர் கடந்த மே மாதம், சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர், பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த ஜெஸ்டஸ், சில தினங்களுக்கு பின்னர், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஜஸ்டஸ்ஸின் உடல், அவரது தந்தை மற்றும் தாய் ஆகியோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகே, கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜெஸ்டஸ் தம்பியான கிறிஸ்டோபர் செய்துள்ள காரியம் ஒன்று, அப்பகுதி மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
தம்பி செய்த காரியம்
ஜெஸ்டஸ் இறந்து சுமார் 18 நாட்கள் ஆன நிலையில், அவரது உடலை கல்லறைத் தோட்டத்தில் இருந்து தோண்டி எடுத்த கிறிஸ்டோபர் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட பலர், அதனை வேறொரு இடத்தில் அடக்கம் செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதனைக் கண்ட குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள், கிறிஸ்டோபர் உள்ளிட்டோரின் சம்பவத்திற்கு அதிக எதிர்ப்பினை காட்டியதாகவும் கூறப்படுகிறது.
அதிர்ச்சியை ஏற்படுத்திய 'வீடியோ'
இந்த எதிர்ப்புகள் அனைத்தையும் மீறி, வேறொரு இடத்தில் சிறிய பள்ளம் ஒன்றைத் தோண்டி, அதில் ஜெஸ்டஸ் உடலை மீண்டும் அடக்கம் செய்துள்ளார் கிறிஸ்டோபர். இது தொடர்பான நிகழ்வை அங்கே நின்றவர்கள், வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர, பார்ப்போர் பலரும் ஒரு நிமிடம் அதிர்ந்து போயுள்ளனர். இது தொடர்பான வீடியோக்களும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்ட உடலை, எதற்காக இன்னொரு இடத்தில் புதைத்தார்கள் என்பது பற்றிய சரியான விவரம் எதுவும் தெரியவில்லை. அதே வேளையில், தன்னுடைய நிலத்தில் அண்ணன் உடல் புதைக்கப்பட்டதன் பெயரில், கிறிஸ்டோபர் இதனை செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக, ஜெஸ்டஸ் மகன், போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை செய்தும் வருகின்றனர். அடக்கம் செய்யப்பட்ட அண்ணனின் உடலை, சுமார் 18 நாட்கள் கழித்து அவரது சகோதரர் தோண்டி எடுத்து, வேறொரு இடத்தில் புதைத்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மற்ற செய்திகள்