"மனைவி போன் எடுக்கமாட்டேங்குறா.." வெளிநாட்டில் இருந்து பதற்றத்தில் அழைத்த கணவர்.. ஓடி போய் பாத்த உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
முகப்பு > செய்திகள் > தமிழகம்கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பகுதியை அடுத்த பெரியவிளை என்னும் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவர் சிங்கப்பூர் பகுதியில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
Also Read | "லீவு மட்டும் வேணாம் ப்ளீஸ்.." கலெக்டருக்கு சிறுமி வைத்த கோரிக்கை.. வைரல் பின்னணி..
இவருக்கும், ஞான பாக்கியபாய் என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தொடர்ந்து, இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
மேலும், ஞான பாக்கியபாய் கொட்டாரம் பேரூராட்சியில் பரப்புரையாளராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
கணவர் செந்தில் வெளிநாட்டில் இருப்பதால், அவரிடம் அடிக்கடி வீடியோ கால் மூலம், மனைவி ஞான பாக்கியபாய் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன், வழக்கம் போல தனது கணவருடன் ஞான பாக்கியபாய் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு மத்தியில், விபரீத முடிவை எடுக்க முயன்று, மனைவி ஞான பாக்கியபாய், வீடியோ கால் இணைப்பை துண்டித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனைத் தொடர்ந்து, தனது மனைவியின் போனுக்கு மீண்டும் மீண்டும் செந்தில் அழைத்துக் கொண்டிருந்துள்ளார். ஆனால், ஞான பாக்கியபாய் அழைப்பை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால், அதிகம் பதற்றம் அடைந்த செந்தில், உடனடியாக பக்கத்து வீட்டில் உள்ள உறவினர்களுக்கு செல்போன் மூலம் நடந்த விவரத்தை தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. உடனடியாக, அவர்கள் ஞான பாக்கியபாய் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கே கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததையடுத்து, அவர்கள் கதவை தட்டி பார்த்துள்ளனர். ஆனால், கதவு திறக்கப்படாததால், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அங்கே, ஞான பாக்கியபாய் விபரீத முடிவை எடுத்து உயிரிழந்து இருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஞான பாக்கியபாய் உடலை கைப்பற்றிய நிலையில், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எந்த ஒரு பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணம் எழுந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.
மாநில உதவிமையம் : 104 .
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.
மற்ற செய்திகள்