ஊரடங்கு 'தளர்வு' அறிவிச்சிட்டாங்க... ஆனாலும் அது ரொம்ப 'செரமமா' இருக்கு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஊரடங்கு தளத்தப்பட்ட பிறகும் கன்னியாகுமரியில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. அங்கு சுற்றுலா பயணிகள் வராததால் கடைகள் திறக்கப்படவில்லை.

ஊரடங்கு 'தளர்வு' அறிவிச்சிட்டாங்க... ஆனாலும் அது ரொம்ப 'செரமமா' இருக்கு!

கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். ஆனால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பே அதாவது கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. அத்துடன் அன்று முதல் சுற்றுலாபயணிகள் வருகையும் அடியோடு நின்றுவிட்டது.

இந்தநிலையில் கடந்த 4-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. குமரி மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் டீக்கடை உள்பட அத்தனை கடைகளும் நிபந்தனைகளுடன் திறக்கப்பட்டன. தற்போது குமரி மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு டீக்கடை பெட்டிக்கடை என பெரும்பாலான கடைகளும் திறக்கப்பட்டன. ஆனால் உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் மட்டும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பிறகும் இன்னும் இயல்புநிலை திரும்பவில்லை.

அங்கு டீக்கடைகளோ, பெட்டிகடைகளோ சாலையோர கடைகளோ இன்னும் திறக்கப்படவில்லை. இதற்கு காரணம் என்ன? என்று வியாபாரிகளிடம் கேட்ட போது கன்னியாகுமரியில் முழுக்க முழுக்க சுற்றுலா பயணிகளை வைத்துதான் வியாபாரம் நடக்கிறது என்றும் சுற்றுலா பயணிகள் இன்னும் வராததால் கடைகள் திறக்கப்படவில்லை என்றும் கூறினார்கள்.