Kaateri Mobile Logo Top

"என் பெயரை நெஞ்சுல பச்சை குத்தி.. காதலை நிரூபிச்சு காட்டு".. காதலிக்கு கண்டீஷன் போட்ட காதலன்.. கையில் காப்பு மாட்டிய காவல்துறை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கன்னியாகுமரியில் தனது காதலியை மிரட்டி வந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

"என் பெயரை நெஞ்சுல பச்சை குத்தி.. காதலை நிரூபிச்சு காட்டு".. காதலிக்கு கண்டீஷன் போட்ட காதலன்.. கையில் காப்பு மாட்டிய காவல்துறை..!

Also Read | மகளோட கல்யாணத்துல பந்தயம் கட்டிய பெற்றோர்.. விஷயம் தெரிஞ்சு கடுப்பான மணமகள்.. அதுவும் எதுல பெட் கட்டிருக்காங்கன்னு பாருங்க..!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் அபினேஷ். இவர் பூக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடைய அறிமுகம் கிடைத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து இருவரும் நட்பாக பழகி வந்திருக்கின்றனர். நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் காதலித்து வந்த நிலையில் திடீரென ஒரு நாள் வித்தியாசமான கட்டுப்பாடு ஒன்றை விதித்திருக்கிறார் அபினேஷ். இதனால் அந்த இளம் பெண் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்.

Kanyakumari police arrested youth who threatens his girlfriend

காதலை நிரூபிச்சு காட்டு

அபினேஷ் தனது காதலியிடம் தன்னுடைய பெயரை மார்பில் பச்சை குத்தும் படி சொல்லியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண் உடனடியாக மறுத்திருக்கிறார். தொடர்ந்து காதலை நிரூபிக்க இவ்வாறு செய்யவேண்டும் எனவும் அபினேஷ் கூறவே, இதனால் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து அபினேஷ் தனது பெயரை பச்சை குத்தும்படி வற்புறுத்தவே, அந்த இளம்பெண் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

இதனால் கோபமடைந்த அபினேஷ் இருவரும் பேசிய வாய்ஸ் ரெக்கார்டிங் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை வெளியிடுவேன் என இளம்பெண்ணை மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அப்பெண் மேலும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

Kanyakumari police arrested youth who threatens his girlfriend

மிரட்டல்

இதனை தொடர்ந்து, போன் மூலமாக இளம்பெண்ணின் பெற்றோரிடம் இதுகுறித்து பேசிய அபினேஷ், நேரடியாக வீட்டுக்குச் சென்று வாக்குவாதத்திலும் ஈடுபட்டிருக்கிறார். இதனால் அந்த இளம்பெண்ணின் தந்தை இதுகுறித்து மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் அபினேஷை கைது செய்திருக்கின்றனர். மேலும், அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்து அதில் இருந்த புகைப்படங்கள் மற்றும் வாய்ஸ் ரெக்கார்ட்டை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.  இது அப்பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | குரங்கு அம்மை அச்சம்... "இதையெல்லாம் தப்பித் தவறிக்கூட செஞ்சுடாதீங்க".. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட எச்சரிக்கை..!

POLICE, KANYAKUMARI, ARREST, YOUTH, THREATEN, GIRLFRIEND

மற்ற செய்திகள்