மகனுக்கு சொகுசு வீடு இருந்தும் குப்பை மேட்டில் வசித்து வரும் 80 வயது மூதாட்டி..? மனதை நொறுங்க வைத்த சோகம்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்கன்னியாகுமாரி மாவட்டம், திங்கள் நகர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது பாடுவான்விளை எனும் பகுதி.
இந்த பகுதியில் பாழடைந்த வீடு ஒன்று இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அந்த வீட்டில், குப்பைகளுக்கு நடுவே சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் படுத்த படுக்கையாக உயிருக்கு போராடி கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
இது பற்றி அறிந்த அப்பகுதி இளைஞர்கள், ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிகிறது.
இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடம் வந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த மூதாட்டி அதே பகுதியைச் சேர்ந்த 80 வயதான கித்தேரி அம்மாள் என்பது தெரிய வந்துள்ளது. கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்பாக அவரது கணவர் இறந்த நிலையில் அவரது ஒரே மகனை, வீட்டு வேலைகளுக்கு சென்று அதில் கிடைத்த ஊதியத்தின் மூலம் படிக்க வைத்து வளர்த்து ஆளாக்கிய கித்தேரி அம்மாள், அவருக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.
அப்படி ஒரு சூழலில் கித்தேரி அம்மாளின் மகன், லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து தனியாக வீடு ஒன்றைக் கட்டி மனைவி மற்றும் மகன்களுடன் சொகுசாக வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து கித்தேரி அம்மாள் பழைய வீட்டிலும், பின்னர் கடந்த ஐந்து ஆண்டுகளாக தெருவில் கிடக்கும் இரும்பு, பிளாஸ்டிக் குப்பைகளை விற்பனை செய்து அதில் வரும் பணத்தில் வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.
அப்படி ஒரு சூழலில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக மூதாட்டியின் கால்கள் செயலிழந்த நிலையில், பாழடைந்த வீட்டில் குப்பைகளுக்கு நடுவே அவர் படுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் கித்தேரி அம்மாளுக்கு கடந்த ஆறு மாதங்களாக, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உணவளித்து வந்த நிலையில், தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளார்.
மகனுக்கு சொகுசு வீடு இருந்த போதும் தள்ளாடும் வயதில் தனியாக குப்பை கூடங்களுக்கு நடுவில் தாய் வசித்து வந்த தகவல் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது
மற்ற செய்திகள்