அலறி ஓடிவந்த சிறுமி.. "2 நாளா அம்மா கட்டிலுக்கு அடில.." "இன்னொரு ரூம்'ல அப்பா".. உள்ள போய் பார்த்து நடுங்கிய ஊர் மக்கள்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் வனஜா (வயது 32).

அலறி ஓடிவந்த சிறுமி.. "2 நாளா அம்மா கட்டிலுக்கு அடில.." "இன்னொரு ரூம்'ல அப்பா".. உள்ள போய் பார்த்து நடுங்கிய ஊர் மக்கள்..

முதல் கணவரை பிரிந்த வனஜா, குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஜோஸ் கான் பியர் என்ற மீனவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

முதல் கணவருக்கு பிறந்த இரண்டு பெண் குழந்தைகளான மஞ்சுளா மற்றும் அக்ஷரா ஆகியோரும் தாய் வனஜாவுடன் வாழ்ந்து வந்துள்ளனர்.

தொடர்ந்து, வேலைக்கு வேண்டி, ஜோஸ் கான் வெளிநாடு சென்றுள்ளார். கடந்த டிசம்பர் மாதம், மீண்டும் நாகர்கோவிலுக்கு அவர் வந்துள்ளார். பின்னர், வேறு வேலைக்கு எதுவும் அவர் செல்லாமல், மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டிலேயே இருந்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஓடி வந்த மகள்

இந்நிலையில், திடீரென ரத்த காயங்களுடன் மூத்த மகள் மஞ்சு வீட்டை விட்டு, வெளியே ஓடி வந்துள்ளார். அவரது சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், என்ன நடந்தது என்பது பற்றி விசாரித்துள்ளனர். அம்மாவைக் கொலை செய்து, கட்டிலுக்கு அடியில் அப்பா வைத்துள்ளதாக, மற்றவர்களிடம் மஞ்சு தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு பதறிய அவர்கள், உடனடியாக வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர்.

பதறிப் போன அக்கம் பக்கத்தினர்

மகள் கூறியது போலவே, கட்டிலுக்கு அடியில், வனஜாவின் உடல் அழுகிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவரின் முகம் பிளாஸ்டிக் கவர் ஒன்றால் மூடப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. அறை முழுவதும் துர்நாற்றம் வீசியிருந்த நிலையில், மற்றொரு சிறுமி அக்ஷரா மயக்கமான நிலையில் இருந்துள்ளார்.

கணவர் எடுத்த முடிவு

மேலும், மற்றொரு அறையில், தூக்கிட்ட நிலையில், ஜோஸ் கான் பியர் இறந்துள்ளார். இது அக்கம் பக்கத்தினர் மத்தியில் இன்னும் அதிர்ச்சியை உண்டு பண்ணியது. இதனையடுத்து, கோட்டார் காவல் நிலையத்தில் இது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. உடல்களை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு வேண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடும்ப பிரச்சனை

அதே போல, காயம் ஏற்பட்ட சிறுமி மஞ்சுவையும் சிகிச்சைக்கு வேண்டி சேர்த்துள்ளனர். தொடர்ந்து, கணவன் மனைவி முடிவுக்கான காரணம் என்ன என்பது பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. வனஜா மற்றும் ஜோஸ் கான் ஆகியோருக்கு இடையே, குடும்ப பிரச்சனையின் பெயரில், அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடும் ஆத்திரத்தில் செய்த செயல்

கடந்த சில தினங்களுக்கு முன், வாக்குவாதம் வலுத்துள்ளதாகவும் தெரிகிறது. மனைவியின் செயலால் அதிக ஆத்திரம் அடைந்த ஜோஸ் கான், அவரை கொலை செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அதன்படி, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து வனஜாவுக்கு கொடுக்க, குடித்த அவரும் மயக்கம் அடைந்துள்ளார். இதன் பிறகு, தான் எதிர்பார்த்தது போல, மனைவியின் முகத்தில் பிளாஸ்டிக் கவர் சுற்றி, அவரை தீர்த்துக் கட்டியதாக கூறப்படுகிறது.

அலறிய மகள்கள்

இதனைத் தொடர்ந்து, பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வந்த மகள்கள், தாயை பற்றி கேட்டுள்ளனர். ஒழுங்காக பதில் சொல்லாமல் ஜோஸ் இருந்த போது, தாயின் உடல் கட்டிலுக்கு அடியில் இருப்பதை பார்த்து, மகள்கள் பதறிப் போயுள்ளனர். அம்மா பற்றிக் கேட்டு குழந்தைகள் சத்தம் போடத் தொடங்கவே, குழந்தைகளின் கை மற்றும் கால்களை கட்டி, வாய்க்குள் துணியை அமுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

திடுக்கிடும் தகவல்கள்

இதன் பின்னர், கடந்த இரண்டு நாட்களாக என்ன செய்வதென்று தெரியாமல், வீட்டிற்குள்ளேயே ஜோஸ் இருந்துள்ளார். இறுதியில், எப்படியும் போலீசில் நாம் மாட்டி விடுவோம் என்ற பயத்தில், ஜோஸ்கான் பியர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. மஞ்சு மீது கட்டப்பட்டிருந்த துணி அவிழ்ந்ததால், வனஜா மற்றும் ஜோஸ் கான் ஆகியோர் நிலை குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியே தெரிந்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியைக் கொன்று, இரண்டு நாட்கள் அதே வீட்டில் இருந்த மீனவர் எடுத்த முடிவும், குமரி மாவட்டத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிர் விலை மதிப்பற்றது. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

HUSBAND, WIFE, CHILDREN, POLICE, ENQUIRY

மற்ற செய்திகள்