ஆஹா, சூனாபானா ஊரே ஒண்ணு கூடிருச்சு.. இனிமே அலார்ட்டா இருந்துக்க டா.. ஊருக்கு மத்தியில் 90's கிட்ஸ் வைத்த பேனர்
முகப்பு > செய்திகள் > தமிழகம்கன்னியாகுமரி : திருமணம் நடைபெறாத விரக்தியில், ஊர் இளைஞர்கள் சேர்ந்து வைத்த பேனர் ஒன்று, தற்போது வைரலாகி வருகிறது.
மனிதராக பிறந்த ஒருவரின் வாழ்க்கையில், இரண்டாவது இன்னிங்ஸ் எது என்று கேட்டால், நிச்சயம் அது திருமணமாக தான் இருக்கும். இந்த கருத்திற்கு ஒரு சிலர் முரண்பட்டாலும், பெரும்பாலானோர் நிச்சயம் ஒத்துத் தான் போவார்கள்.
அந்த அளவுக்கு, ஒருவரின் வாழ்வில், திருமணம் என்பது முக்கிய பங்காக விளங்குகிறது. பள்ளி, கல்லூரி, வேலை என்பவற்றை தொடர்ந்து, அடுத்த கட்டமான கல்யாணத்தின் மூலம் தான், குடும்பம் என ஒன்று உருவாகிறது.
ஆன்லைனில் ஆடையில்லாத வீடியோ கால்.. வராததால் கோபத்தில் கிளம்பிய இளைஞர்.. அடித்து வெளுத்த அழகி
திருமண வரைமுறை
இப்படி பல சிறப்புள்ள திருமணம் என்பது, நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆகவும், காதல் திருமணம் ஆகவும் நிகழலாம். இதில், நிச்சயம் செய்து நடைபெறும் திருமணத்தில் பல படிகள் உள்ளது. மணமக்கள் வீட்டார், முதலில் நேரில் சந்தித்து, பின் இரு குடும்பத்தை பற்றி அக்கம் பக்கத்தினரிடமும், ஊர் மக்களிடம் விசாரித்து, பிறகு சிறந்த வரன் என தெரிந்த பின்னர், திருமணத்தை உறுதி செய்வார்கள்.
ஊரார் கருத்து
ஒரு வேளை, ஊர் மக்கள் மணமக்கள் குறித்து தவறாக ஏதேனும் கூறி விட்டால் அவ்வளவு தான். அந்த வீட்டில் திருமணம் நடத்த வேண்டுமா எனக் கூட சிந்திக்கத் தொடங்கி விடுவார்கள். அந்த அளவுக்கு, ஊர் மக்களின் கருத்தும், திருமணத்திற்கு முதன்மையாக பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த ஊர் மக்களின் கருத்து, சமீப காலமாக தவறான வழியில் இருப்பதாக இளைஞர்கள் பலர் கருதி வருகிறார்கள்.
இளைஞர்கள் வைத்த பேனர்
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 90'ஸ் கிட்ஸ் சிலர், தங்களது திருமணம் தள்ளிப் போவதற்கான காரணம் குறித்து, பேனர் ஒன்றை வைத்துள்ளனர். புலியிறங்கி என்னும் பகுதியில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனரில், 'புலியிறங்கி பகுதி மக்களுக்கு ஒரு அறிவிப்பு. இந்த பகுதியில் வந்து விசாரிக்கும் அனைத்து திருமண வரன்களையும், தடுத்து நிறுத்தும் அனைத்து நெஞ்சங்களுக்கும், அவர்களது குடும்பத்தார்களுக்கும் மிக்க நன்றி.
இனிமே ஆக்ஷன் தான்
இப்பணியை செய்பவர்கள், சில பெண்கள், ஆண்கள், வேலை வெட்டி இல்லாதோர் மற்றும் பெட்டி கடைகளில் வந்திருப்போர். தங்களுடைய இந்த நற்பணி மேலும் தொடர்ந்தால், இனி வரும் விளம்பரத்தில் தங்களுடைய பெயர், புகைப்படம் மற்றும் ஆதாரத்துடன் வெளியிடப்படும். இப்படிக்கு, திருமண வரன் தேடும் இளைஞர்கள்' என அந்த பேனரில் தகவல் இடம்பெற்றுள்ளது.
பாவம் 90's கிட்ஸ்
இந்த பேனர் தொடர்பான பதிவுகள் மற்றும் புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகின்றன. சமீப காலமாகவே, 90's கிட்ஸ்களுக்கு தகுந்த நேரத்தில் திருமணம் நடப்பதில்லை என்று தான், அதிகம் மீம் கண்டென்ட்டுகளை நாம் பார்த்து வருகிறோம்.
மன்னிப்பு கேட்ட சித்தார்த்.. வரவேற்று சாய்னா கொடுத்த சூப்பர் பதில்
நிலைமை அப்படி இருக்க, தங்களின் திருமணத்தை ஊர் மக்களே நிறுத்துவதாக, திருமணத்திற்காக காத்திருக்கும் இளைஞர்கள் குறிப்பிடப்பட்டுள்ள இந்த பேனர், அவர்களை இன்னும் அதிக மீம் கன்டென்ட் மெட்டீரியலாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்