'நோயாளிகள் அறைக்குள் புகுந்த காதல் ஜோடி...' 'இருந்தாலும் கடலைமுத்து ரொம்ப ஸ்ட்ரிக்டு' சீன் போல ரூம் லாக்... ! 'ஓப்பன் பண்ணா ஒருத்தர காணோம்...' - அங்க தான் டிவிஸ்ட்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸை சொல்லி வெளி நோயாளிகள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையின் பெரும்பாலான அறைகள் காலியாக இருந்துள்ளது. இந்த நிலையில் அங்கே 108 ஆம்புலன்சில் பணியாற்றும் செவிலியர் ஒருவர் தவறான காரியங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

'நோயாளிகள் அறைக்குள் புகுந்த காதல் ஜோடி...' 'இருந்தாலும் கடலைமுத்து ரொம்ப ஸ்ட்ரிக்டு' சீன் போல ரூம் லாக்... ! 'ஓப்பன் பண்ணா ஒருத்தர காணோம்...' - அங்க தான் டிவிஸ்ட்...!

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (01-11-2020) இரவு யாரும் இல்லாத நேரம் பார்த்து அந்த நர்ஸை சந்திக்க இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அவரை உள்நோயாளிகள் இல்லாமல் காலியாக இருந்த படுக்கை அறைக்குள் அழைத்துச்சென்ற பெண், உள்பக்கமாக தாளிட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

இதை கவனித்த அந்த பகுதி இளைஞர்கள் சிலர் அந்த அறையின் கதவை 'இருந்தாலும் கடலை முத்து ரொம்ப ஸ்ட்ரிக்டு' என்ற வடிவேல் காமெடி பாணியில் வெளிப்பக்கமாக பூட்டு போட்டுவிட்டு அரசு மருத்துவமனைக்குள் திருடன் புகுந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நர்ஸுடன் அறைக்குள் ஒருவர் இருக்கும் தகவல் காட்டுத்தீயாய் பரவ சிகிச்சை எடுக்க வந்தவர்களும், அப்பகுதியை சேர்ந்தவர்களும் அந்த ரூமை சுற்றி வளைத்தனர்.

உடனடியாக விரைந்து வந்த போலீசார் உள்ளே இருப்பது திருடன் அல்ல காதல் ஜோடிகள் என்பதை அறிந்து வெளிப்பக்க பூட்டை திறந்து, அறைக்குள் இருக்கும் செவிலியரை வெளியில் வர கூறியுள்ளனர். கதவை திறந்து வெளியே வந்த செவிலியர் தன்னை யாரோ சிலர் ரூமில் வைத்து பூட்டி விட்டதாக வும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவமாக கூறியுள்ளார்.

போலீசார் அந்த அறைக்குள் சென்று பார்த்த போது நர்ஸ் கூறியது போலவே அறைக்குள் எவரும் இல்லை, அறையை பூட்டியது யார் என்று போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர், அப்போது அங்கிருந்த மக்கள் அங்கே ஒரு சிறிய அறை உள்ளது. உடனடியாக திறந்து பாருங்கள் என்று கூறியுள்ளனர்.

அது கழிவறை தான் செவிலியர் சமாளித்துள்ளார். அதனை திறந்து பார்த்த போது உள்ளே பதுங்கி இருந்த பாக்ஸர் வசமாக மாட்டிக் கொண்டார். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் செவிலியரின் காதலன் என்பது தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னர் பணிபுரிந்த இடத்தில் இருந்து குலசேகரம் பகுதிக்கு பணியிடமாற்றம் செய்ததால் காதலனை சந்திக்க இயலவில்லை என்றும், எனவே எங்கள் திருமண வாழ்க்கை குறித்து பேசுவதற்காக காதலனை வரவழைத்ததாகவும் இனிமேல் இது போன்ற தவறுகளில் ஈடுபடமாட்டோம் என்று இருவரும் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

இதையடுத்து இருவரையும் போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்து இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர்.

மற்ற செய்திகள்