Bigg boss 6 tamil : "உங்களுக்கு தேவைப்படுற நேரத்துல உடம்பு நல்லாச்சு.. திரும்பவும் உடம்பு முடியாம போயிடுச்சு ".. ஷெரினாவுக்கு கமல் அறிவுரை.. பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் வெளியிலும் பறந்த கைத்தட்டு..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொம்மை டாஸ்க் முடிவடைந்த பின்னர், தற்போது சண்டை, விவாதம் என அனைத்தும் ஓய்ந்து தற்போது மீண்டும் போட்டியாளர்கள் கலகலப்பாக இருக்க தொடங்கி உள்ளனர்.

Bigg boss 6 tamil : "உங்களுக்கு தேவைப்படுற நேரத்துல உடம்பு நல்லாச்சு.. திரும்பவும் உடம்பு முடியாம போயிடுச்சு ".. ஷெரினாவுக்கு கமல் அறிவுரை.. பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் வெளியிலும் பறந்த கைத்தட்டு..

முன்னதாக பொம்மை டாஸ்க் ஆரம்பித்த நாள் முதலே பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் மாறி மாறி சண்டை போட்டு கொண்டு தான் இருந்தனர்.

அதிலும் குறிப்பாக, பொம்மை டாஸ்க்கிற்கு மத்தியில் சில போட்டியாளர்கள் இடையே சிக்கிக் கொண்ட ஷெரினா, கீழே விழுந்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரியும் நிலையில், இதற்கு காரணம் தனலட்சுமி தான் என அசீம், மகேஸ்வரி உள்ளிட்ட பலரும் குற்றம் சுமத்தி இருந்தனர். மறுபக்கம், விக்ரமன் உள்ளிட்ட சிலர் தனலட்சுமிக்கு ஆதரவாகவும் கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர்.

பொம்மை டாஸ்க் முழுக்க முழுக்க ஷெரினாவை தனலட்சுமி தள்ளி விட்டார் என்பதை பற்றி தான் வலம் வந்திருந்தது. அப்போது பேசி இருந்த தனலட்சுமி, ஷெரினாவை நான் தள்ளி விட்டதாக உறுதியானால் அனைவரின் காலில் விழுந்து வெளியே போகவும் தயாராக இருக்கிறேன் என்றும் சக போட்டியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இது பற்றி வார இறுதியில் பேசி இருந்த கமல்ஹாசன், குறும்படம் போட்டு ஷெரினாவை தனலட்சுமி தள்ளி விடவில்லை என்பதையும் உறுதி செய்திருந்தார். அதே போல, ஷெரினா உடல்நிலை சரியில்லாமல் போனது குறித்தும் அவரிடமே கமல்ஹாசன் பேசி இருந்தார்.

ஷெரினாவுக்கு சில அறிவுரைகளை வழங்கி பேசிய கமல், "நீங்க சொல்றீங்க, Somebody pushed me, எனக்கு தெரியாதுங்குறீங்க. நான் அதுல ஒரு கரெக்ஷன், அதாவது உங்க தெளிவுக்காக சொல்றேன். Some body didn't push you. Some body (ஒருவர்) push you. ஸ்போர்ட்ஸ்ல இந்த மாதிரி நடக்கும். உதாரணத்துக்கு கபடி விளையாட வரக் கூடாது. கீழ விழுந்ததுக்கு அப்புறம் வேணாம்ன்னு சொல்லிட்டு இந்த விளையாட்டு வேணாம்ன்னு சொல்லிட்டு என்னால் முடியாது பயமா இருக்கும்ன்னு சொல்லிட்டு போவது போல, உங்களுக்கு தலையில் அடிபட்டு சிகிச்சை எடுத்து விட்டு ஓய்வெடுத்திருக்கலாம்.

ஆனால், உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் விளையாட வந்தீர்கள். திரும்பவும் உங்களுக்கு எதிராக அங்கே நடந்த உடனேயே மீண்டும் உங்களுக்கு உடம்பு முடியாமல் போய் விட்டது. அசீம் அவரோட வெயிட்ட மொத்தமா போட்டு மேல உட்காரும் போது, உங்க டீம்ங்குற காரணத்துனால அந்த வலியை நீங்க பெருசுபடுத்தல" என குறிப்பிட்டிருந்தார்.

KAMALHAASAN, SHERINA, BIGGBOSS TAMIL

மற்ற செய்திகள்