"விஸ்வரூபம் அப்போ அந்த அம்மையார் என்னை கொக்கரித்து தடுமாற வெச்சாங்க.. உதவியது கலைஞர் & ஸ்டாலின்தான்" - கமல்.
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் கமல்ஹாசன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விஸ்வரூபம் பட பிரச்சினை குறித்து பேசியுள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
உலகநாயகன் கமல்ஹாசன் நடிகராக மட்டுமல்லாது 'மக்கள் நீதி மய்யம்' என்ற தேர்தல் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவராகவும் உள்ளார்.
கலாச்சாரம், காந்தியம், சினிமா, அரசியல் சம்பந்தப்பட்ட களங்களில் நடக்கும் மாநாடு மற்றும் கருத்தரங்குகளில் அவ்வப்போது கமல்ஹாசன் கலந்து கொண்டும் வருகிறார்.
மகாத்மா காந்தியாரின் மிகத்தீவிர பின்பற்றாளரான உலகநாயகன் கமல்ஹாசன், கதர் ஆடைகளை அணிந்து கதர் ஆடை குறித்த விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்தி வருபவர். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியுடன் சேர்ந்து பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.
தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பும் சில மாதங்களுக்கு முன் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இடைத்தேர்தல்
கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா தனது 46 வயதில் உயிரிழந்தார். இவர், தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் ஆவார்.
திருமகன் ஈவெரா மறைவால் காலியான ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. காங்கிரஸ் - திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட உள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில் இளங்கோவனை ஆதரித்து, மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனத் தலைவர் கமல்ஹாசன் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது விஸ்வரூபம் பட ரிலீஸ் பிரச்சினை குறித்தும் கமல்ஹாசன் பேசினார். அதில், "நான் ’விஸ்வரூபம்’ படத்தை எடுத்த போது சம்பந்தமே இல்லாமல் என்னை தடுமாற வைத்து கொக்கரித்த ஒரு அம்மையார் இருந்தார். உங்களுக்கு எல்லாம் தெரியும். தனி மனிதனாக, ஒரு சிறு கலைஞனாக அதை நான் எதிர் கொண்ட போது கலைஞர் அவர்கள் என்னை தொடர்பு கொண்டு, "நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். பயப்படாமல் இருங்கள். நீங்கள் நல்ல கலைஞன்" என கூறினார். "எனக்கு பயம் இல்லங்க ஐயா. இது என் தனிப்பிரச்சினை. நான் பார்த்துக் கொள்கிறேன். ரொம்ப நன்றி" என்று கூறி நான் போனை வைத்த கொஞ்ச நேரத்தில் தற்போதைய முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து அழைப்பு, "எதாவது உதவி வேண்டும் என்றால் கேளுங்கள். நாங்கள் இருக்கிறோம்". என்று சொன்னார்கள். கூட்டணி வைக்க வேண்டும் என்றால் அப்போதே வைத்திருப்பேன்". என கமல்ஹாசன் பேசினார்.
2013- ஆம் ஆண்டில், விஸ்வரூபம் பட ரிலீஸ் பிரச்சினையின் போது, " 'விஸ்வரூபம்' திரையிடப்படும் 524 தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் அளவுக்கு போலீஸ் படை தமிழக அரசுக்கு இல்லை. இது சட்டம் ஒழுங்கு பிரச்னையேத் தவிர அரசியல் பிரச்னை இல்லை. கமல்ஹாசன் 'வேட்டி அணிந்தவர் பிரதமராக வர வேண்டும்' என்று சொன்னதால்தான் படத்துக்குத் தடை என்பதும் கற்பனைக் கதை. ஜெயா டிவிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முஸ்லிம் அமைப்புகளும், கமல் ஹாசனும் பேசி ஒரு உடன்பாட்டுக்குள் வந்தால் அதன்பிறகான விஷயங்கள் சுமூகமாக நடக்க அரசு உதவி செய்யும்." என்று அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியது குறிப்பிடத்தக்கது.
2013 ஜனவரி மாதம் 25 ஆம் தேதி தமிழகத்தை தவிர மற்ற எல்லா இடங்களிலும் விஸ்வரூபம் படம் ரிலீஸ் ஆனது. பின்னர் பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு தமிழகத்தில் பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி திரையரங்குகளில் விஸ்வரூபம் படம் ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.
Also Read | ஓடும் ரயிலில் வடமாநிலத்தவர் மீது தாக்குதல்.. வைரலான வீடியோவால் சிக்கிய நபர்.. திடுக் பின்னணி..!
மற்ற செய்திகள்