'மகேந்திரன் ஒரு துரோகி...' களையெடுக்க வேண்டிய லிஸ்ட்ல 'முதல் ஆளே' அவரு தான்...! - விளாசி தள்ளிய மநீம தலைவர் கமல்ஹாசன்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் வெற்றி பெறாதது மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.

'மகேந்திரன் ஒரு துரோகி...' களையெடுக்க வேண்டிய லிஸ்ட்ல 'முதல் ஆளே' அவரு தான்...! - விளாசி தள்ளிய மநீம தலைவர் கமல்ஹாசன்...!

சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் தோல்விக்கான காரணம் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார், கட்சியில் சிலர் சரியாக தேர்தல் பணி செய்யாமல் கடமைக்கு கட்சியில் இருந்ததை தெரிந்துகொண்டதையடுத்து, அவர்கள் உடனடியாக களையெடுக்கப்படுவார்கள் என்று எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், மாலையில் கட்சியில் ஜனநாயகம் இல்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்திலிருந்தும் வெளியேறுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் கட்சியை சீரமைக்கும் தலைவர் கமல்ஹாசனின் செயல்திட்டத்தை முடுக்கி விடும் நோக்கத்துடனும், புதிய பொறுப்புகளை உருவாக்குவதற்காக, இதுவரை மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளாக உள்ள துணை தலைவர், பொன்ராஜ், பொதுச்செயலாளர்கள் சந்தோஷ் பாபு, குமரவேல், மவுரியா, முருகானந்தம், நிர்வாக குழு உறுப்பினர் உமாதேவி உள்ளிட்டோரிடமிருந்து கட்சி தலைமை ராஜினாமா கடிதங்களை கேட்டுப் பெற்றுள்ளது.

கட்சியில் ஜனநாயகம் இல்லை என்று கூறிய மகேந்திரன், தமிழகத்தை சீரமைப்பதற்கு முன் கட்சியை சீரமைக்க வேண்டும் என கடுமையாக சாடினார். இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகேந்திரனை மிகக்கடுமையாக விளாசி தள்ளியுள்ளார்.

கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் களை எடுப்போம் என்ற தலைப்புடன் பகிர்ந்த அந்த  அறிக்கையில், களத்தில் எதிரிகளுடன் துரோகிகளும் கலந்திருந்தார்கள் என்பதை நாங்கள்  கண்கூடாக கண்டோம். துரோகிகளை களை எடுங்கள்  என்பதே அனைவரின் ஒருமித்த குரலாக இருந்தது. அப்படி களையெடுக்கப்பட வேண்டியவர்கள் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் மகேந்திரன் என்று தெரிவித்துள்ளார்.

கட்சியில் உன் மையாக உழைக்க தயாராக இருந்த பல நல்ல மனிதர்களை தலையெடுக்க விடாமல் தடுத்ததே மகேந்திரனின் சாதனை. திறமையும் நேர்மையும் இல்லாதவர்கள் வெளியேற மக்கள் நீதி மய்யத்தின் கதவுகள் திறந்தே இருக்கும். தனது திறமையின்மை, நேர்மையின்மை, தோல்வி ஆகியவற்றை, அடுத்தவர் மீது பழிபோட்டு அனுதாபம் தேட முயற்சிக்கிறார் மகேந்திரன்.

தன்னை எப்படியும் நீக்கிவிடுவார்கள் என்பதை தெரிந்துக்கொண்டு, முன்கூட்டியே புத்திசாலித்தனமாக விலகிக்கொண்டார். ஒரு களையே தன்னை களை என்று புரிந்துகொண்டு, தன்னைத்தானே நீக்கிக்கொண்டதை உங்களை போலவே நானும் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன். இவ்வாறு கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்