'உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் கோவை தெற்கு தொகுதி...' 'ரொம்ப க்ளோசா போயிட்ருக்கு...' - தற்போது யாரு முன்னிலை...?
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் போட்டியிட்டார். பாஜக சார்பில் வானதி சீனிவாசன், காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார், அமமுக சார்பில் துரைசாமி என்ற சேலஞ்சர் துரை, நாம் தமிழர் கட்சி சார்பில் அப்துல் வகாப் ஆகியோர் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே கமல் ஹாசன், காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர். இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரை பின்னுக்கு தள்ளி வானதி சீனிவாசன் முன்னேறினார்.
தற்போதைய நிலவரப்படி மீண்டும் மயூரா இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளார். கமல் ஹாசன் 36,885 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். வானதி சீனிவாசன் 34,839 வாக்குகள் பெற்றுள்ளார். இதன்மூலம் 19-வது சுற்றின் முடிவில், கமல்ஹாசன் 1,874 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
மூவருக்கும் இடையே குறைந்த அளவு வாக்குகளே வித்தியாசம் உள்ளதால் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்ற உச்சக்கட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்