மக்கள் நீதி மய்யம் தலைவர் 'கமல்ஹாசன் போட்டியிடும் 'தொகுதி' அறிவிப்பு...! எந்த கட்சிகளுடன் மோதல்...? - இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மக்கள் நீதி மய்யம் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இரண்டாம் கட்டமாக இன்று (12-03-2021) வெளியிடப்பட்டது.
அதில், கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்பது பழமொழி. ஆனால் ஊழல் கோட்டையாக இருக்கும் கொங்குவை மாற்ற நான் போட்டியிடுகிறேன் என கமல்ஹாசன் தெரிவித்தார்.
கோவை தெற்கு தொகுதியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு எதிராக கமல்ஹாசன் போட்டியிடுகிறார். கோவை தெற்கு தொகுதியில் திமுக, அதிமுக போட்டியிடவில்லை. இங்கு பாஜக, காங்கிரஸ் ,நாம் தமிழர் மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றனர்.
ஏற்கனவே ஆலந்தூர், அல்லது மயிலாப்பூர் போன்ற தொகுதிகளில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில் கோவை தெற்கில் போட்டியிடுவது அரசியல் முக்கியத்துவமாக கருதப்படுகிறது.
கோவை தெற்கு தொகுதியில் பாஜக, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பு என்று இன்னும் வெளியாகவில்லை.
மேலும், தி.நகர் - பழ.கருப்பையா ,எடப்பாடி தொகுதி - தாசப்பராஜ், வேளச்சேரி - சந்தோஷ் பாபு ஐஏஎஸ், மயிலாப்பூர் - ஸ்ரீபிரியா, ஆலந்தூர் - சரத்பாபு, சிங்கநல்லூர் - மகேந்திரன் ஆகியோர் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடுகின்றனர்.
மற்ற செய்திகள்