“நான் அவர் காதலி.. நீ எப்படி போனை எடுக்கலாம்?”.. கல்யாணம் ஆகி ஒரே மாதத்தில் .. காதல் ரோமியா பார்த்த வேலை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கள்ளக்குறிச்சி அருகே இளம்பெண்ணை திருமணம் செய்த ஒரு மாதத்திலேயே இன்னொரு பெண்ணை திருமணம் செய்த ஒருவரை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

“நான் அவர் காதலி.. நீ எப்படி போனை எடுக்கலாம்?”.. கல்யாணம் ஆகி ஒரே மாதத்தில் .. காதல் ரோமியா பார்த்த வேலை!

கள்ளக்குறிச்சி அருகே உள்ள பெருவங்கூர் கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவரின் 22 வயது மகனான பூவரசன் பக்கத்து வீட்டில் வசித்த நர்மதா என்பவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் நெருங்கிப் பழகி உள்ளார். இதனால் நர்மதா கர்ப்பமடைந்தார். இதனையடுத்து பூவரசனிடம், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நர்மதா வற்புறுத்த, பூவரசன் திருமணத்துக்கு மறுத்ததுடன் தலைமறைவாகினார்.

இதனையடுத்து தற்கொலை முடிவு எடுத்த நர்மதா காப்பாற்றப்பட்டார். பின்னர் பூவரசன் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் செப்டம்பர் 25 ஆம் தேதி பூவரசன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். பின்னர் மனம் மாறி நர்மதாவை திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக் கொண்டு திருமணமும் செய்து கொண்டார். ஆனால் கடந்த ஒரு மாதமாக பூவரசன் வீட்டில் நர்மதா வாழ்ந்து வந்த நிலையில் பூவரசனுக்கு ஏற்கனவே கல்லூரியில் படிக்கும்போது சேலம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த தீபிகாவுடன் காதல் இருந்ததும், திருமணத்திற்கு பிறகு தீபிகாவுடனான காதல் தொடர்ந்து வந்ததும் நர்மதாவுக்கு தெரியவந்தது.

இந்த நிலையில் தீபிகா பூவசரனுக்கு போன் செய்தபோது அதனை நர்மதா எடுத்து பேசியுள்ளார். தீபிகா,  “நான் பூவரசனின் காதலி பேசுகிறேன். நீ யார் போன் எடுப்பதற்கு?” என கேட்க, அதற்கு நர்மதா, “நான் அவருடைய மனைவி பேசுகிறேன்” என்று பதில் சொல்ல அப்போதுதான் தீபிகா, “பூவரசனை நான் காதலிக்கும் போது நீ எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்?” என்று சண்டை போட்டதாக தெரிகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக பூவசரனுடன் நர்மதா சண்டை போட்ட நிலையில், பூவரசன் தீபிகாவுடன் திருமணத்தை முடித்துள்ளார். பின்னர் சிறுவங்கூர் பகுதியில் தீபிகாவுடன் தங்கியிருந்துள்ளார். இதற்கிடையே நர்மதாவின் குடும்பத்தினர் பூவரசனை தேடி வந்துள்ளனர். ஒருகட்டத்தில் சிறுங்கூரில் தங்கியிருந்த பூவசரன் மற்றும் தீபிகா இருவரையும் கையும் களவுமாக கண்டுபிடித்தனர். அதன்பின்னர் கள்ளக்குறிச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் மீண்டும் அளிக்கப்பட்டது.

தீபிகாவின் பெற்றோருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் வந்து தீபிகாவை சமாதானம் செய்து தங்களுடன் அழைத்துச் சென்றனர். இப்படி ஒரு மாதத்துக்குள் இரண்டு திருமணங்கள் செய்த பூவரசன் இப்போது தன் காதலை எண்ணி, தன் திருமணத்தை எண்ணி கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

மற்ற செய்திகள்