'பரவா இல்லங்க, ஒரு ரவுண்ட் கூட அடிங்க...' கணவனை மட்டையாக்கிட்டு...' 'இதான் சரியான சான்ஸ் என...' என்ன நடந்தது...? - மனைவி போட்ட மாஸ்டர் ப்ளான்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கள்ளக்காதலனுடன் பேச தடையாய் இருந்த கணவரை தீர்த்துக்கட்டிய மனைவியை போலீசார் அவரின் கள்ளக்காதலனுடன் கைது செய்துள்ளனர்.

'பரவா இல்லங்க, ஒரு ரவுண்ட் கூட அடிங்க...' கணவனை மட்டையாக்கிட்டு...' 'இதான் சரியான சான்ஸ் என...' என்ன நடந்தது...? - மனைவி போட்ட மாஸ்டர் ப்ளான்...!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை, கீழாத்துகுழி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தேவராஜ் (30). இவருக்கு புஷ்பா(27), என்ற மனைவி, 8 மற்றும் 5 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் புஷ்பா மற்றும் தேவராஜ் கடந்த ஜனவரி மாதம், கர்நாடக மாநிலம், மைசூரில் இருக்கும் மிளகு தோட்டத்திற்கு கூலி வேலைக்குச் சென்றுள்ளார்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கணவனும் மனைவியும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் கடந்த, 7-ம் தேதி கல்வராயன்மலை வனப்பகுதியில் தேவராஜ்ஜின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குபதிவு செய்த கரியாலுார் போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேவராஜின் மனைவி புஷ்பாவிற்கும், மிளகு தோட்டத்தில் அவருடன் பணிபுரிந்த கல்வராயன்மலை, கீரகடை கிராமத்தைச் சேர்ந்த மணி (23) என்பருக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சொந்த ஊருக்கு திரும்பி வந்த பின்னும் அவர்களின் உறவை தொடர்ந்துள்ளனர். அடிக்கடி போனில் பேசுவதை கவனித்த தேவராஜ் ஒரு கட்டத்தில் மனைவி வேறொருவருடன் உறவில் உள்ளார் என்பதை அறிந்து அவரை கண்டித்துள்ளார்.

இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் தேவராஜை புஷ்பாவும் மணியும் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். இதனால் கடந்த, 2-ம் தேதி, தேவராஜை, புஷ்பா அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்து சுயநினைவை மறக்கடிக்க செய்துள்ளார்.

அதைத்தொடர்ந்து தன் கள்ளக்காதலன் மணிக்கு போன் செய்து வீட்டிற்கு வருமாறும் கூறியுள்ளார். மணி தனது மைத்துனர் சுரேஷுடன் வந்து தேவராஜின் வாயில் துணி வைத்து அடைத்து கொலை செய்துள்ளனர். இறந்த உடலை இருவரும் பைக்கில் தூக்கி கல்வராயன்மலை வனப்பகுதியில் வீசியுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். கணவரை கொலை செய்த புஷ்பா மற்றும் அவரின் கள்ளக்காதலன் மணியை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களுக்கு உதவி புரிந்த சுரேஷை போலீசாரை தேடி வருவதாக கூறியுள்ளனர்.

மற்ற செய்திகள்