மனைவியின் ஆவி புகுந்ததா? மனைவி குரலில் கணவன் சொன்ன விஷயம்.. கடைசியில் கிணற்றுக்குள் காத்திருந்த அதிர்ச்சி

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் செய்த காரியம்  அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியின் ஆவி புகுந்ததா? மனைவி குரலில் கணவன் சொன்ன விஷயம்.. கடைசியில் கிணற்றுக்குள் காத்திருந்த அதிர்ச்சி

வருமான வரி செலுத்த போறீங்களா? பட்ஜெட்டில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு

கருச்சிதைவு :

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் குணமங்கலம் என்ற கிராமத்த்தில் ஹரிகோவிந்தன் (வயது 27) மற்றும் அவரது மனைவி  கீர்த்திகா (வயது 24) வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆகிக்கின்றது. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு அடுத்தடுத்து மூன்று மாதம் கீர்த்திகாவுக்கு கருச்சிதைவு ஏற்பட்டதால் மிகுந்த மனஉளைச்சலில் இருந்துள்ளார்.

தனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்ற காரணத்தால் மனமுடைந்த கீர்த்திகா கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார். கீர்த்திகா அதீத காதல் வைத்திருந்த ஹரி தன் மனைவி இறந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வந்துள்ளார்.

Kallakurichi husband taken by the decision for wifes death

மனைவியின் ஆவி:

அதோடு, ஹரி கோவிந்தன் தினமும் தன் நண்பர்களிடம் தன்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை என்றும் கீர்த்திகா இல்லாத உலகத்தில் தான் எப்படி வாழ்வது எனவும் புலம்பி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் கிரித்திகாவை காணவேண்டும் என நள்ளிரவு நேரத்தில் கிரித்திகாவை நல்லடக்கம் செய்த சுடுகாட்டிற்கு சென்றுள்ளார். அதுமட்டுமில்லாமல், கீர்த்திகாவின் ஆவி தனது உடலில் பற்றிக் கொண்டதாகவும் அதனால் கீர்த்திகாவின் குரலிலேயே தான் கீர்த்திகாவிடம் செல்லப் போவதாகவும் கூறி கதறி அழுதுள்ளார். அவரின் நண்பர்களும், குடும்பத்தாரும் ஹரியை தனியாக விடாமல் ஆறுதல் கூறி தேற்றி வந்துள்ளனர்.

செல்போனில் தொடர்பு கொள்ள இயலவில்லை:

இந்நிலையில் தான் நேற்று இரவு சுமார் 11 மணி ஆகியும் ஹரிகோவிந்தன் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஹரியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி மற்றும் நண்பர்களும் உறவினர்களும் பல இடங்களில் தேடி பார்த்த நிலையில் அவர் எங்கும் தென்படவில்லை. அவரது செல்போன் நம்பருக்கு தொடர்ந்து கால் செய்த நிலையில் அவரது செல்போன் அடித்தும் எடுக்கவில்லை. 

கிணற்று பகுதியில்இருந்த செல்போன்:

அதை தொடர்ந்து இன்று காலை மீண்டும் உறவினர்கள் தேடுதல் வேட்டையில் இறங்கிய போது, அவர் வீட்டின் அருகாமையில் இருந்த ஒரு விவசாய கிணற்று பகுதியில் ஹரிகோவிந்தன் அணிந்திருந்த கைலி கிடந்துள்ளது. இதனை பார்த்த அவரது உறவினர்கள் அந்த லுங்கியை எடுத்து பார்த்தபோது அதன் கீழே அவரது செல்போனும் கிடந்துள்ளது.

விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள்:

இதனால் சந்தேகமடைந்த ஹரிகோவிந்தன் உறவினர்கள் உடனடியாக உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.  சம்பவ இடத்திற்கு வந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றில் இறங்கி நவீன கொக்கிகளைக் கொண்டு தேடிப் பார்த்தபோது ஹரிகோவிந்தன் சடலமாக மீட்கப்பட்டார்.

டைரியில் எழுதி வைத்திருந்த கடிதம்:

மேலும், பிரேத பரிசோதனைக்காக ஹரிகோவிந்தன் உடல் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்கொலை சம்பவம் குறித்து அறிந்த எடைக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஹரிகோவிந்தன் தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தியபோது ஹரிகோவிந்தன் டைரியில் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது அந்த கடிதத்தை கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரே சந்தேகமா இருக்கே.. முடியை ஓபன் பண்ணிப் பார்த்த அதிகாரிகள்.. சென்னை ஏர்போர்ட்டில் ‘ஷாக்’ கொடுத்த பெண்கள்..!

KALLAKURICHI, HUSBAND TAKEN BY THE DECISION FOR WIFES DEATH, கள்ளக்குறிச்சி, மனைவி

மற்ற செய்திகள்