தமிழ்நாடு வருமான வரித்துறையில் அசத்தலான வேலைவாய்ப்பு: விண்ணப்பிப்பது எப்படி?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாடு வருமான வரித்துறையில் காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
வருமான வரித்துறையில் காலியாக உள்ள Stenographer, Inspector, Assistant ஆகிய பணிகளுக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.incometaxindia.gov.in என்ற அதிகாரபூர்வ இணைய தள பக்கத்துக்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.
வருமான வரித்துறையில் மொத்தம் 4 காலியிடங்கள் உள்ளன. இன்ஸ்பெக்டர் பணிக்கு 2 இடங்கள், உதவியாளர் பணிக்கு 1 இடம் மற்றும் ஸ்டெனோக்ராஃபர் பணிக்கு 1 இடம் என காலிப்பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் நிச்சயமாக ஏதேணும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஸ்டெனோ வேலைக்கு 12-ம் வகுப்பு படித்திருந்தா போதுமானது. இந்த வேலைக்கு விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. இந்த பணிக்கான ஊதியம் 9,300 ரூபாய் முதல் 35,400 ரூபாய் வரையில் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
மற்ற செய்திகள்