எங்கப்பா 'தண்ணி' கேட்டு இருக்காரு... அவங்க சொன்னதை கேட்டு 'மனசு' வலிக்குது... ஜெயராஜ் குடும்பம் உருக்கம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசாரின் அதிரடி நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. போலீசார் மீது கொலை வழக்காக பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் எஸ்.ஐ-க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் தலைமை காவலர் முருகன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மற்றொரு காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

எங்கப்பா 'தண்ணி' கேட்டு இருக்காரு... அவங்க சொன்னதை கேட்டு 'மனசு' வலிக்குது... ஜெயராஜ் குடும்பம் உருக்கம்!

இந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கைகளுக்கு ஜெயராஜ் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து அவரது மகள் பெர்சி, '' அன்னைக்கு நைட்டு எங்கப்பா தண்ணி கேட்டு இருக்காரு. அதுக்கு தண்ணீர் கூட கொடுக்க கூடாதுன்னு போலீசார் சொன்னதா ரேவதி கணவர் சொன்னப்போ ரொம்ப வேதனையா இருக்கு. தலைமைக்காவலர் ரேவதி சொன்னதை கேட்டு மனசு வலிக்குது.

ரெண்டு உசிர ஒரே நேரத்துல பறிகொடுத்துட்டு நிர்கதியா நிக்கிறோம். மதுரை கோர்ட் தானாக இந்த வழக்கை எடுத்துக் கொண்டதாலயும், நீதிபதி உங்க கண்ணீருக்கு நீதி கெடைக்கும்னு சொன்னதுனாலயும் தான் ரெண்டு பேரோட உடல்கள பெற்றோம். சொன்ன மாதிரி நீதி கெடச்சுடுச்சு. எல்லார்கிட்டயும் விசாரணை நடத்தி உச்சபட்ச தண்டனை வழங்கணும்,'' என்றார்.

மற்ற செய்திகள்