‘சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் புதிய தகவல்!’.. பரபரப்பை ஏற்படுத்திய சிபிஐ-யின் குற்றப்பத்திரிகை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்த ரத்தக் கறைகள் சிறைக்காவல் விசாரணை வழக்கில் மரணம் அடைந்த ஜெயராஜ் ,பெனிக்ஸ் ஆகியோரின் டி.என்.ஏவுடன் ஒத்துப் போவதாக தடயவியல் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக சிபிஐ குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் புதிய தகவல்!’.. பரபரப்பை ஏற்படுத்திய சிபிஐ-யின் குற்றப்பத்திரிகை!

சாத்தான்குளம் காவல் நிலையத்தின் கழிப்பறை சுவர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தந்தை மகன் கொலை வழக்கில் சம்பந்தமாக தடவியல் பரிசோதனை குழுவினர் சோதனை மேற்கொண்டதில் அங்கிருந்த ரத்தக் கறைகள் ஜெயராஜ், பெனிக்ஸ் இருவருடன் பொருந்தியது பற்றி சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இரவு முழுவதும் இருவரும் தாக்குதலில் பலத்த காயம் அடைந்ததாகவும், அதனால் இரத்தக் கசிவு ஏற்பட்டதாகவும், அவ்வாறு சிந்திய ரத்தத்தை, காயம்பட்ட தந்தை, மகன் இருவரையும் பயன்படுத்தி போலீஸார் துடைத்ததாகவும்  சிபிஐயின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இருவரையும் வீட்டிலிருந்து மாற்று உடைகளை கொண்டுவரச் சொல்லி இரண்டு முறை உடைகள் மாற்றப் பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் வெண்ணிலா பரிசோதனை செய்தபோது அலட்சியமாக செயல்பட்டதால் ஜெயராஜ் ஆகியோருக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இருந்ததை குறிப்பிடாமல், சிறையில் அடைக்க தகுதியானவர்கள் என்று சான்றிதழ் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐயின் இந்த குற்றப்பத்திரிகை பெரும் அதிர்வலைகளை உண்டு பண்ணியுள்ளது.

மற்ற செய்திகள்