ஜெயலலிதா வாழ்ந்த 'வேதா' இல்லம்... 'நினைவு' இல்லமாக மாற்றி திறந்து வைத்த 'தமிழக' முதல்வர்!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை மெரினாவில், ஜெயலலிதாவின் நினைவிடத்தை நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த நிலையில், இன்று சென்னை போயஸ் கார்டனில் அரசு உடைமையாக்கப்பட்ட வேதா நினைவு இல்லத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
தமிழக அரசியலில் மாபெரும் தலைவராக திகழ்ந்த ஜெயலலிதா, கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் தேதி மரணமடைந்தார். அதன்பிறகு, ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற கோரிக்கைகள் வலுத்த நிலையில், ஜெயலலிதாவின் வேதா இல்லம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, இன்று வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றி முதல்வர் திறந்து வைத்தார்.
வேதா நினைவு இல்லத்தின் பெயர் பலகை மற்றும் நினைவு இல்ல கல்வெட்டினையும் மக்கள் பார்வைக்காக திறந்து வைத்த தமிழக முதல்வர், ரிப்பன் வெட்டி வேதா இல்லத்தினுள் நுழைந்தார். இல்லத்திற்குள் நுழைந்த முதல்வர், குத்துவிளக்கு ஏற்றியதையடுத்து, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் ஆகியோரும் குத்து விளக்கை ஏற்றி நினைவு இல்லத்தை பார்வையிட்டனர்.
அங்கே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மற்ற செய்திகள்