"அடங்கி போணும்ன்னு அவசியமில்ல".. "அது என் விருப்பம்".. அமுதவாணன் கிட்ட முகத்துக்கு நேரா சொன்ன ஜனனி.. வைரல் சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இதன் ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பு நிறைந்தும் சென்று கொண்டிருப்பதால் பார்வையாளர்களும் இதனை ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.

"அடங்கி போணும்ன்னு அவசியமில்ல".. "அது என் விருப்பம்".. அமுதவாணன் கிட்ட முகத்துக்கு நேரா சொன்ன ஜனனி.. வைரல் சம்பவம்!!

Also Read | பிரபல கிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு தடையா??.. இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு??.. வெளியான பரபரப்பு தகவல்!!

அதே போல, பிக்பாஸ் வீட்டில் தற்போது ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டாஸ்க் அரங்கேறி வருகிறது. அது மட்டுமில்லாமல், இந்த டாஸ்க்கின் பெயரில் ஏராளமான பஞ்சாயத்து பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கிறது.

பொம்மை டாஸ்க், ராஜாங்கமும், அருங்காட்சியகமும் டாஸ்க் என அனைத்து டாஸ்க்கிலும் பல போட்டியாளர்களுக்கு இடையே நிறைய சண்டைகளும் நடந்து அதிக பரபரப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் உண்டு பண்ணி இருந்தது.

janani and amudhavanan convo about dhana bigg boss

அப்படி ஒரு சூழலில், இந்த வாராம் பிக்பாஸ் வீட்டில் நீதிமன்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது. அனைத்து போட்டியாளர்களும் தங்களது குற்றங்களை வழக்காக முன் வைக்க, அதனை நீதிமன்றம் மூலம் வாதாடி, அந்த வழக்கில் தீர்ப்பை எட்ட வேண்டும். அந்த வகையில், ADK - அசீம் விவகாரம், விக்ரமன் - அமுதவாணன் விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்கள், போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்படும் நீதிபதியால் தீர்ப்பு வழங்கப்பட்டும் வருகிறது.

janani and amudhavanan convo about dhana bigg boss

முன்பு நடந்த சண்டைகளை வைத்து சில வழக்குகள் நடைபெறுவதால் வாதாடும் சமயத்தில் தீப்பறக்கவும் செய்கிறது. இந்த நீதிமன்ற டாஸ்க்கிற்கு மத்தியில், திடீரென ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகியோர் கோபத்தில் வார்த்தைகளை பரிமாறிக் கொண்ட நிகழ்வும் நடந்திருந்தது. ஷிவின், அமுதவாணன் உள்ளிட்டோர் சமையல் செய்து கொண்டிருக்க, அவர்களை சுற்றி குயின்சி, தனலட்சுமி, ரச்சிதா, ஜனனி உள்ளிட்டோர் நிற்கின்றனர். அந்த சமயத்தில் உணவு தயார் செய்து தருவது தொடர்பாக தனலட்சுமி பேச, குறுக்கே ஜனனியும் கருத்தை தெரிவிக்கிறார்.

உடனடியாக பேசும் தனலட்சுமி, "நீ சும்மா சண்டைக்கு வந்துட்டே இருக்காதே" என எரிச்சலுடன் கூற, இதற்கு பதில் சொல்லும் ஜனனி, "தனலட்சுமி யாரு சண்டைக்கு வந்தது?. எல்லாத்துக்கும் கத்தாத சரியா?" என கூறுகிறார். "நீதான் எல்லார்கிட்டயும் கத்திக்கிட்டு இருக்க. நான் கத்தல. என்கிட்ட கத்தாத அந்த மாதிரி" என தனலட்சுமி திருப்பி ஆவேசமாக பேசுகிறார்.

janani and amudhavanan convo about dhana bigg boss

தனலட்சுமி வார்த்தையால் இன்னும் கோபமடைந்த ஜனனி, "நீ உன் திமிர என்கிட்ட காட்டாத சரியா" என தெரிவிக்க, "என்கிட்ட எல்லாம் திமிர் இல்ல, என்கிட்ட திமிர் இருந்தத நீ பாத்தியா?" என்ன பதில் கேள்வி கேட்டு கோபம் அடைகிறார் தனலட்சுமி. "என்கிட்ட கத்தாதே" என ஜனனி சொன்னதும் சீ போ என்கிறார் தனலட்சுமி. ஷிவின் இருவரையும் சமாதானம் செய்ய அந்த பிரச்சனை அங்கே முடிந்தது.

ஜனனி மற்றும் தனலட்சுமி இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இதன் பின்னர், இது குறித்து ஜனனி மற்றும் அமுதவாணன் ஆகியோர் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

janani and amudhavanan convo about dhana bigg boss

அந்த சமயத்தில் அமைதியாக இருக்கும் படி ஜனனியை அமுதவாணன் அறிவுறுத்துவதாக தெரிகிறது. அப்போது பேசும் ஜனனி, "அமைதி இருக்கு. ஆனா எல்லாத்துக்கும் அடங்கி போகணும்னு அவசியம் இல்லை" என கூறியதும் அமுதவாணன் எதையோ சொல்ல முற்பட, "அது என் விருப்பம். சரியா?. எனக்கு தெரியும். எல்லாத்துக்கும் அடங்கி போகணும்னு அவசியம் இல்ல. அது பிழை என்று நான் ஃபீல் பண்ண வில்லை. சம்பந்தம் இல்லாமல் சீ போன்னு சொல்ற அளவுக்கு நான் இல்ல" என ஜனனி விளக்கம் கொடுக்கிறார்.

அந்த சமயத்தில் பேசும் அமுதவாணன், ஒரு ஃப்ரண்ட் என்பதால் சீ போ என தனா சொல்லி இருக்கலாம் என தெரிவிக்கிறார். பின்னர் பேசும் ஜனனி, "சீ போ என்று அவள் சொல்லக் கூடாது. அது பிழையாக தெரிந்ததால் அப்படி சொல்லாதீங்க என சொன்னேன்" என்கிறார்.

இதன் பின்னர் தனக்கு நடந்தது சரியாக தெரியவில்லை போல என அமுதவாணன் சொல்ல, "உங்களுக்கு தெரியாதது உங்களோட பிரச்சனை" என ஜனனியும் கடைசியில் கூறுகிறார்.

Also Read | ராணுவ சீருடையில் 4 மாதங்கள் வேலை பார்த்த பிறகு.. இளைஞருக்கு தெரிய வந்த அதிர்ச்சி!!.. பணத்தையும் இழந்த பரிதாபம்..

BIGG BOSS, BIGG BOSS TAMIL, BIGG BOSS TAMIL 6, VIJAY TV, JANANI, AMUDHAVANAN, DHANALAKSHMI

மற்ற செய்திகள்