ஜனவரி 17... கவர்மென்ட் அறிவிச்ச லீவு.. தனியார் கம்பெனி ஊழியர்களுக்கு பொருந்துமா? விபரம் என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. பெரும்பாலான சேவைகள் 50% சதவீதத்துடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 17... கவர்மென்ட் அறிவிச்ச லீவு.. தனியார் கம்பெனி ஊழியர்களுக்கு பொருந்துமா? விபரம் என்ன?

பொங்கல்

பொங்கலை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நான்கு நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்படும். இதனால் வெளியூர்களில் வேலை செய்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்துடன் பொங்கல் திருவிழாவைச் சிறப்பாக கொண்டாடுவார்கள். அந்த வகையில், தமிழகத்தில் ஜனவரி 17-ஆம் தேதி அரசு விடுமுறை என அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Jan 17 Will TN announce holidays for private sector employees?

அடிபொலி!!! பொங்கலுக்கு லீவு குடுத்துருக்காங்கயா நம்மட கேரள அரசு! முழு விபரம்!!!

விடுமுறை

பொங்கல் மற்றும் தைப்பூசத்திற்கு இடைப்பட்ட நாளான ஜனவரி 17-ஆம் தேதி விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினத்தை ஈடுசெய்ய ஜனவரி 29-ஆம் தேதி (ஜன.4) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 16-ஆம் தேதியும், தைப்பூசத்திற்காக ஜனவரி 18-ஆம் தேதியும் ஏற்கெனவே விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இடைப்பட்ட நாளான ஜனவரி 17-ஆம் தேதியையும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்க அரசு பணியாளர் சங்கங்களிடமிருந்து கோரிக்கை எழுந்தது.

Jan 17 Will TN announce holidays for private sector employees?

இதனையடுத்து அவர்களது கோரிக்கையை பரிசீலனை செய்து அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கு ஜனவரி 17-ஆம் தேதி விடுமுறை என அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனவரி 17

இந்த அறிவிப்பு பொத்துத்துறை பணியாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இருப்பினும் ஜனவரி 17ம் தேதி விடுமுறை அறிவிப்பு தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் பொருந்துமா? என்பது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது. ஜனவரி 16ம் தேதியான ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. முழு ஊரடங்கு நாளில் அனைத்து வேலைகளும் முடங்கிவிடுகிறது. பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. காக்கா, குருவி, நாய்களின் நடமாட்டத்தை தவிர மனிதர்களின் நடமாட்டத்தை காண்பது அரிது தான்.

 

Jan 17 Will TN announce holidays for private sector employees?

 

ஞாயிறு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள்... தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

தனியார் நிறுவன ஊழியர்கள்

இப்படியான சூழலில் தனியார் நிறுவன ஊழியர்கள் பலர் புலம்பெயர்ந்து பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். சொந்த ஊருக்கு செல்லும் அவர்கள், பொங்கல் தின கொண்டாட்டட்டத்தை முடித்த கையோடு, முழு ஊரடங்கு தினத்தில் இரவு பேருந்து கிடைத்தால் மட்டுமே ஜன.17ம் தேதி அவரால் பணியை தொடர முடியும். ஊரடங்கு தினத்தில் தனியார் துறை நிறுவன ஊழியர்கள் நெருக்கடியான சூழலை சந்திக்க நேரிடுகிறது. குடும்பத்தோடு வந்தவர்கள், அவசரமான நிலையில், வெளியூர் செல்ல நினைப்பவர்களுக்கும் மிகவும் சோதனை தரக்கூடிய நிகழ்வாக அமைகிறது என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

Jan 17 Will TN announce holidays for private sector employees?

கொரோனா

கொரோனா போன்ற சூழலால் சொந்த ஊர்களுக்கே செல்ல முடியாமல் தவித்து வருபவர்களின் நிலையை செய்திகளில் மூலம் படித்து தெரிந்து கொள்கிறோம். கொரோனா காலத்தில் பொங்கல் தினத்தை மகிழ்ச்சியோடு சொந்த பந்தங்களோடு கொண்டாட முடியாமல் கட்டுப்பாடுகளோடு கொண்டாட வேண்டியுள்ளது. இப்படியான சூழலில் விடுமுறை கிடைப்பதும் அவ்வளவு எளிதல்ல. ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் தான் சொந்த ஊர்களுக்கு வந்து செல்கிறோம்.

Jan 17 Will TN announce holidays for private sector employees?

ஞாயிறு அன்று சென்னைக்கு திரும்புவதில் இருக்கும் சிரமம் அரசு ஊழியர்கள் குடும்பங்களுக்கு மட்டுமானது அல்ல அது தனியார் நிறுவன ஊழியர்களுக்கும்தான் என்பதை மனிதாபிமானத்துடன் இந்த அரசு உணர்ந்து தெளிவான அறிவிப்பை கொடுக்க முன்வர வேண்டும் அப்படி இல்லையென்றால் அரசு உடனடியாக திருத்தப்பட்ட மறு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

TN ANNOUNCE, PONGAL HOLIDAYS, TN GOVT, PRIVATE SECTOR EMPLOYEES, பொங்கல், தமிழக அரசு

மற்ற செய்திகள்