'லவ் அங்க தான் ஸ்டார்ட் ஆச்சு...' ஸோ மேரேஜும் 'அந்த எடத்துல' வச்சு தான் நடத்தணும்...! - பெர்மிசன் கேட்டு காதல் ஜோடி மனு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மலர்ந்த காதலால், கல்யாணமும் வாடிவாசல் முன்பு தான் நடக்க வேண்டும் என மதுரை ஆட்சியரிடம் காதலர்கள் மனு கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கடந்த 2017 ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு விழாவில், அலங்காநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளரான கார்த்திகேயன் (32), மற்றும் சமூக ஆர்வலர் வித்தியாதரணி (28) பார்வையாளர்களாக சென்றுள்ளனர்.
அந்த சமயத்தில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாகப் பழகி, கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் 2021-ஆம் ஆண்டு திருமணம் செய்ய முடிவெடுத்த இருவரும், தங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு, தாங்கள் சந்தித்துக் கொண்ட அதே தேதியில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசல் முன்பு திருமண உறுதியேற்பு நிகழ்ச்சி நடத்த முடிவெடுத்துள்ளனர்.
இதுசம்பந்தமாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கவும் வந்துள்ளனர். மேலும் இந்தவருடம் நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் பங்கேற்று துவங்கி வைக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்