“வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு! .. எங்களுக்கு இந்த 2 கடமை இருக்கு”! - வேதா இல்லம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு.. நெகிழ்ச்சியில் ஜெ.தீபா!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா வசித்து வந்த சென்னை வேதா நினைவு இல்லத்தின் ஒரு பகுதியை நினைவில்லமாக மாற்ற தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்றைய தினம் பரிந்துரைத்தது.

“வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு! .. எங்களுக்கு இந்த 2 கடமை இருக்கு”! - வேதா இல்லம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு.. நெகிழ்ச்சியில் ஜெ.தீபா!

அதே சமயம், அதனை ஏன் முதல்வரின் நினைவில்லமாக மாற்றக்கூடாது என்கிற கேள்வியையும் உயர்நீதிமன்றம் எழுப்பியது.

இதனிடையே ஜெயலலிதாவின் சொத்துக்கள் மீது அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோருக்கு உரிமை உண்டு என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியதோடு, மேலும் அவர்கள் இருவரையும் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு இரண்டாம் நிலை வாரிசாகவும் நியமித்து உத்தரவிட்டனர்.

இதனை அடுத்து இந்தத் தீர்ப்பை கொண்டாடும் விதமாக, “இது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு” என்றும் “ஜெயலலிதாவின் சொத்துக்களையும், நம்பிக்கையை பாதுகாக்கக் கூடிய கடமை எங்களுக்கு இருக்கிறது!” என்றும் “ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு நாங்களே வாரிசு என்பது உறுதியாகியுள்ளது” என்றும் ஜெ.தீபா பேட்டியளித்துள்ளார்.

மற்ற செய்திகள்