காதலர் தினத்தில் கூகுள் வழங்கிய ஆஃபர்.. ரூ. 1 கோடி சம்பளம்.. இந்தியாவையே பிரமிக்க வைத்த பெண்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்தியாவில் ஐஐடி கல்லூரிகள் உட்பட அனைத்து பெரிய பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வியூ தொடங்கியுள்ள நிலையில் இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வமாக மாணவர்களைத் தேர்வு செய்து வருகின்றன. இரண்டு வருடம் ஊரடங்கு காரணமாக ஐஐடி கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வியூ மிகவும் மந்தமாக இருந்த நிலையில், இந்த வருடம் உச்சத்தைத் தொட்டு உள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஐஐடி புவனேஸ்வர் கல்லூரியை சேர்ந்த மாணவருக்கு உபர் நிறுவனம் சுமார் 2 கோடி ரூபாய், அதாவது 2,74,250 டாலர் சம்பளத்தில் பணி நியமன கடிதத்தைக் கொடுத்தது. இந்திய மதிப்பில் இது 2 கோடியைத் தாண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காதலர் தினத்தில் கூகுள் வழங்கிய ஆஃபர்.. ரூ. 1 கோடி சம்பளம்.. இந்தியாவையே பிரமிக்க வைத்த பெண்!

ஐடி மாணவி சம்ப்ரீத்தி யாதவ்

இந்நிலையில் பாட்னாவை சேர்ந்த ஐடி மாணவி சம்ப்ரீத்தி யாதவ் என்பவருக்கு கூகுள் நிறுவனம் ரூ.1.10 கோடி சம்பளத்துடன் வேலை வாய்ப்பை வழங்கியிருக்கிறது. பாட்னா நோட்ரே டேம் அகாடமி பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர் 2021 மே மாதம் டெல்லி டெக்னாலஜி கல்லூரியில் பிடெக் கம்யூட்டர் சயின்ஸ் படிப்பை முடித்துள்ளார். மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த இவர் தற்போது 44 லட்சம் ரூபாய் சம்பளத்துடன் பணியாற்றி வருகிறார்.

பெற்றோர் மகிிழ்ச்சி

சம்ப்ரீத்தி யாதவின் ்தந்தை ராமசங்கர் யாதவ். இவர் எஸ்பிஐ வங்கியில் இந்திய அதிகாரியாக உள்ளார். இவரது தாயார் சஷி பிரபா. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டில் கல்லூரி பட்டப்படிப்பை முடித்து மைக்ரோசாப்ட், பிளிப்கார்ட் நிறுவனங்களில் வேலை கிடைத்துள்ளது. ஆனாலும் அவர் கூகுளில் பணி செய்ய வேண்டும் என்ற ஆசையோடு கூகுளில் பல ரவுண்ட் இண்டர்வுயூக்களில் வெற்றிகரமாக இன்று பிப் (14) கூகுளில் வேலைக்கு சேரவுள்ளார்.

கூகுளில் வேலை

முன்னதாக, தான் கூகுள் இண்டர்வியூவின் மிகவும் பதற்றத்துடன் இருந்து வந்ததாகவும், பெற்றோர், நெருங்கிய நண்பர்களால் ஊக்குவித்ததாக தெரிவித்திருந்தார். கூகுளில் பணிக்கு சேர 50 இண்டர்வியூகளை சென்றுள்ளதாக குறிப்பிட்டார். இந்த நேர்காணல்களை தொடர்ந்து  அவர் கேட்ட 1 கோடி சம்பளத்தை கூகுள் நிறுவனம் அவருக்கு வழங்குகிறது. தற்போது சம்ப்ரித்தி யாதவ் ரூ.1 கோடி சம்பளத்துடன் கூகுளில் இன்று பணியில் சேர்கிறார்.

இந்தியாவிலிருந்து பட்டதாரிகள் கூகுள் போன்ற பெரிய ஐடி நிறுவனங்களில் சமீப காலமாக பணியில் சேர்ந்து வருவது இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பதோடு, மற்ற பட்டதாரி இளைஞர்களுக்கும் ஒரு ஊக்கமாக இருந்து வருகிறது.

GOOGLE, LOVERS DAY, PATNA, SAMPREETI YADAV, BIHAR, JOINIG IT JOB

மற்ற செய்திகள்