‘டிவிட்டரில் ட்ரெண்டாகும்..’ ‘#ISupportMaridhas VS #MentalMaridhas’.. ‘யார் இந்த மாரிதாஸ்..?’

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

டிவிட்டரில் ISupportMaridhas மற்றும் MentalMaridhas என்ற ஹேஷ்டேக்குகள் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

‘டிவிட்டரில் ட்ரெண்டாகும்..’ ‘#ISupportMaridhas VS #MentalMaridhas’.. ‘யார் இந்த மாரிதாஸ்..?’

நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் குறித்த தனது கருத்துக்களை யூடியூப் வீடியோக்களாக வெளியிட்டு வருபவர் மாரிதாஸ். சமீபகாலமாக இவர் பாஜகவிற்கு ஆதரவாகவும், திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு எதிராகவும் சில வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதனால் பாஜக ஆதரவாளர்கள் இவரைக் கொண்டாடுவதும், பாஜகவிற்கு எதிரான கருத்துடையவர்கள் இவருடைய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் நடந்து வருகிறது.

இந்நிலையில் மாரிதாஸ் தனது சமீபத்திய வீடியோ ஒன்றில், “சட்டப்பிரிவு 370 நீக்கம் தொடர்பான திமுகவின் நிலைப்பாடு தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக இருக்கிறது. அதனால் திமுகவிற்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருக்கலாம்” எனக் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து திமுக குறித்து அவதூறு செய்திகளை பரப்பி வருவதாக அதன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இவர்மீது நேற்று போலீஸில் புகார் அளித்துள்ளார்.  இந்த செய்தி வெளியானதிலிருந்து இன்று காலை முதல் டிவிட்டரில் ISupportMaridhas என ஒரு தரப்பினர் அவருக்கு ஆதரவாகவும், MentalMaridhas என ஒரு தரப்பினர் அவருக்கு எதிராகவும் பதிவிட்டு வருகின்றனர்.

CHENNAI, MARIDHAS, ISUPPORTMARIDHAS, MENTALMARIDHAS, DMK, BJP, TWITTER, TRENDING