'தற்போது பணியில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு...' - தலைமைச் செயலாளர் போட்ட 'புதிய' உத்தரவு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாட்டில் தற்போது பணியில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சொத்து விவரங்களையும் தாக்கல் செய்யுமாறு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சரியான சொத்து விவரங்களை 2022-ஆம் ஆண்டு ஜனவரி 31 வரை தாக்கல் செய்ய கால அவகாசம் அளிக்கப்பட்டிருப்பதாகவும், உத்தரவை மீறுபவர்களுக்கு தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
பணியில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது சொத்து விவரங்களை ஆண்டுதோறும் தாக்கல் செய்யவேண்டும் என்பது மத்திய அரசின் உத்தரவாகும். மத்திய அரசு நிர்ணயிக்கும் தேதிக்குள் சமர்பிக்கப்படாமல் போனால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதில், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பரம்பரை வழியாக வந்த அசையா சொத்துக்கள், புதிதாக வாங்கப்பட்டுள்ள அசையா சொத்து, குத்தகைக்கு விடப்பட்டிருக்கும் அல்லது அடமானத்தில் வைத்திருக்கும் அசையா சொத்து குறித்த விவரங்களை கட்டாயம் தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்களையும் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.
இந்த நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அவர்கள் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர் சொத்து விவரங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் சொத்துகள் மூலம் வரும் வருவாய் விவரங்களையும் தாக்கல் செய்யுமாறு தலைமைச் செயலாளர் இறையன்பு கூறியுள்ளார். மேலும், உண்மையான விவரங்களை தெரிவிக்காமல் இருந்தாலோ அல்லது மறைத்தாலோ சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
அசையா சொத்துகள் மூலம் கிடைக்கப் பெறும் வருமானத்தின் சரியான தகவல்களை (IPR) இணையதளம் வாயிலாக பதிவு செய்யும் முறை 2017-ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகம் செய்து வைத்தது. இதன்மூலம் IPR-ஐ எலக்ட்ரானிக் முறையிலோ அல்லது நேரடியாக தாக்கல் செய்யப்பட்டதற்கான ஆவணங்களை ஸ்கேன் செய்தும் பதிவேற்றம் செய்யலாம் எனவும் தெரிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்