VIDEO: "லத்தி, துப்பக்கி எப்பவுமே கார்ல இருக்கும்.. இறங்கி அடிச்சாப்றம்தான் அவன் ரவுடினு தெரிஞ்சுது" - சினிமாவை மிஞ்சும் ஆக்ஷன் சம்வங்கள் பண்ணிய விஜயகுமார் IPS | Exclusive
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாடு,ஆந்திரா,கேரளா, கர்நாடகா என நான்கு மாநில காவல் படையினரால் தேடப்பட்டு வந்த சந்தன கடத்தல் வீரப்பன் எத்தனையோ பல போலிஸ் ஆபரேஷன்களுக்கு பிறகு சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்த K.விஜயகுமார் ஐபிஎஸ் அப்போதைய தனிப்படை தலைவராக இருந்து பொறுப்பேற்று, இதை சாத்தியப்படுத்தினார். இறுதியில் அதிரடிப்படைக்குச் சொந்தமான டெம்போ டிராவலர் முற்றிலும் ஆம்புலன்ஸாக ஆக மாற்றப்பட்டு, ஒரு ரகசிய நபர் மூலமாக விஜயகுமார் , மற்றும் அதிரடிப்படையினர் திட்டமிட்டு, அனைவரையும் கூண்டுடன் பிடித்து, ஆனாலும் சரணடைய மறுத்து அவர்கள் சுட முயற்சிக்க, மீண்டும் அதிரடிப்படையினர் சுட்டனர். அதன் பிறகே சுமார் 15, 20 வருட வழக்கு முடிவுக்கு வந்தது.
மேலும் தமது அனுபவம் குறித்து, “Veerappan: Chasing The Brigand” எனும் புத்தகத்தையும் K.விஜயகுமார் எழுதியுள்ளார். இந்நிலையில், பிஹைண்ட்வுட்ஸ் தளத்துக்கு பேட்டி அளித்த விஜயகுமார் ஐபிஎஸ், வீரப்பன் வழக்கு குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார். இதேபோல் தனிப்பட்ட முறையிலும் தனக்கு நடந்த சில நிகழ்வுகள் பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதில், “ஒரு முறை எனது டிரைவர் ஒருவருடன் எனது குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு காரில் தியேட்டருக்கு படம் பார்க்க சென்றிருந்தேன். இன்னும் 500 மீட்டர்தான் தியேட்டர் போகும் தூரம் இருக்கிறது. அதற்கு பின்புறம் போலீஸ் ஸ்டேஷன் இருக்கிறது. ஆனால் ஒருவன் ரவுடித்தனம் செய்து கொண்டிருந்தான். என்னுடைய காரில் எப்போதும் துப்பாக்கியும் லத்தியும் இருக்கும். டிரைவர் கொஞ்சம் முதியவர் என்பதால், நான் தான் ஆக்சுவலி வண்டி ஓட்டிக்கொண்டு வந்து கொண்டு இருந்தேன்.
டிரைவரை உதவிக்கு அழைக்கவும் முடியாது என்பதால் நானே இறங்கி சென்று அந்த ரவுடித்தனம் செய்து கொண்டிருந்தவனை அடித்து விட்டேன். அதன் பிறகுதான் அவன் ஒரு ரவுடி என்று தெரிந்தது. பெரிய ரவுடி என்று சொல்லவும் முடியாது. அந்த ஏரியாவில் அப்படி ஒரு ஆள் அவன். பின்னர் அங்கேயே பிடித்து உட்கார வைத்து டிரைவரிடம் வண்டியை கொடுத்து அனுப்பி விட்டு, நான் அவனை சேலம் பி1 போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விட்டேன். இதேபோல் மதுரைக்கு துப்பாக்கி சூடும் பயிற்சிக்குச் சென்ற போதும் அங்கிருந்து தேனி, கம்பம் வழியாக போகலாம் என்று சுற்றினோம், அப்போது ஒரு போலீஸ் ஸ்டேஷன் முன்பாக அவ்வளவு பெரிய கலவரம் நடந்து கொண்டிருந்தது. அப்போதும் யோசிக்காமல் களத்தில் இறங்கி விட்டேன். இது போன்ற இடங்களில் இறங்குவது என்பது எதையும் யோசிக்காமல் எதார்த்தமாக நம்மை நம்பி மட்டுமே பண்ணியவைதான். அது அவ்வளவு பெரிய விஷயமும் இல்லை” என்று குறிப்பிட்டார்.
Also Read | முதல் டெஸ்ட் 2010-ல, 2வது 2022-ல.. 12 வருடம் கழித்து முதல் விக்கெட் எடுத்த உனத்கட்!! குவியும் வாழ்த்துக்கள்
மற்ற செய்திகள்