ஐபிஎல் அணிகளில் முதல் ஆளாக சிஎஸ்கே வீரருக்கு கொரோனா உறுதி!.. இன்னும் 22 நாட்களே இருக்கும் நிலையில்.. பரபரப்பு தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஐபிஎல் போட்டித் தொடர் தொடங்க இன்னும் 22 நாட்கள்மட்டுமே இருக்கும் நிலையில் முதல் வீரராக சிஎஸ்கே வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடக்குமா நடக்காதா என பல்வேறு இழுபறிகளுக்கு பின்னர், ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொருத்தவரை கடந்த 21-ந்தேதி 51 பேர் கொண்ட குழு துபாய் சென்றது. இந்த குழுவில் உள்ள அணி வீரர்கள் மற்றும் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். 6 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு மீண்டும் வீரர்கள் பயிற்சிக்கு செல்ல தயாராக இருந்தபோது கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி அணியின் வலதுகை வேகப்பந்துவீச்சாளர் தவிர, சிஎஸ்கே நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், அவரின் மனைவி, சமூக ஊடகக் குழு, உதவியாளர்கள் என 12 பேருக்கு கொரோனா தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. வாரத்தில் 3 முறை பரிசோதனை மேற்கொண்டு அதில் நெகட்டிவ் என முடிவு வந்தால் மட்டுமே வீரர்கள் அணியுடன் இணைய அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படும் நிலையில், இந்த பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
மற்ற செய்திகள்