கடையில 'டீ' குடிச்சா கப்'ப திருப்பி குடுப்பீங்க... இல்ல தூர போடுவீங்க... ஆனா இனிமே 'கடிச்சு' சாப்பிடலாம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பொதுவாக கடைகளில் டீ குடித்ததும் அந்த க்ளாஸினை திரும்பி கடையில் கொடுப்பது வழக்கம். அதுவே பேப்பர் அல்லது பிளாஸ்டிக் கப் என்னும் போது தூர வீசி விடுவோம்.

கடையில 'டீ' குடிச்சா கப்'ப திருப்பி குடுப்பீங்க... இல்ல தூர போடுவீங்க... ஆனா இனிமே 'கடிச்சு' சாப்பிடலாம்!

ஆனால், மதுரையில் டீ கடை ஒன்றில் 'பிஸ்கட் கப் டீ' ஒன்றை அருகபப்டுத்தியுள்ளனர். அதாவது, தேனீர் குடித்து முடிந்ததும் அந்த கப்பை நாமே சாப்பிட்டு விடலாம். இந்த பிஸ்கட் கப் டீ அப்பகுதி மக்களிடையே பிரபலமாகி வரும் நிலையில் இதுகுறித்து அந்த டீ கடையின் உரிமையாளர் விவேக் சபாபதி என்பவர் கருத்து தெரிவித்துள்ளார்.

'பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் டீ கப்களை கையாள்வது பெரிய சவாலாக உள்ளது. அந்த கப்களை தூர வீசுகின்றனர். இதனை சற்று யோசித்து பார்த்த போது தான் இந்த ஐடியா கிடைத்தது. ஐஸ்க்ரீம் கோன் போன்று வேப்பர் பிஸ்கட் கப் தயாரித்து அதில் டீ விற்பனை செய்ய முடிவு செய்தேன். இந்த கப்பில் டீயை ஊற்றினால் சுமார் 10 நிமிடங்கள் வரை ஊறி உடையாமல் இந்த கப் தாங்கும். டீ குடித்து முடிந்ததும் கப்பை கடித்து சாப்பிடலாம். இதற்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது' என பெருமிதமத்துடன் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்