'அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சர்ப்ரைஸ்'!.. அதிரடி திட்டத்தை கையிலெடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!.. பின்னணி என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரசுப் பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசு அதிரடி திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
தமிழ்நாட்டில், கடந்த 2020-21 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தரவுகளின்படி, பொறியியல் / வேளாண்மை / கால்நடை / மீன்வளம்/ சட்டம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான காரணங்கள் குறித்து ஆராய்ந்து பரிந்துரை செய்ய, ஓய்வுபெற்ற டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதையடுத்து பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பின்னர், இந்தக் குழு முதலமைச்சர் ஸ்டாலினிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதன்படி தொழிற்படிப்புகளில் கடந்த ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் சேர்ந்துள்ளனர், எந்த அளவு உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்பன உள்ளிட்ட அம்சங்களுடன் 86 பக்க அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்கியுள்ளனர்.
மேலும், இந்த ஆணையம் பரிந்துரைத்துள்ள உள் ஒதுக்கீட்டை துரிதமாக பரிசீலனை செய்து, இந்த ஆண்டே உள் ஒதுக்கீடு வழங்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்